பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 அண்ணல் அநுமன்

இஃது இவன் தந்தை கூறியவாறு திருமாலுக்கு அடிமை செய்யுமாறு பணித்ததையொட்டி நடைபெற்றதாகக் கருதலாம்.

(2) சுக்கிரீவனுக்கு இராமலக்குமணர்களின் தன்மையை எடுத்துக்கூறும் போதும்", அடுத்து அவனுக்கு இராம பிரானின் சிறப்பை விவரிக்கும்போதும் இராமலக்குமணர் களின் மகிமையைக் கொண்டாடும்போதும் அநுமன் அவர்கள்மீது கொண்டுள்ள பக்தி தெளிவாகின்றது.

"முனைவரும் பிறரும்மேல்

முடிவு.அரும் பகலெலாம் இனையர்வந்து உறுவர்என்று

இயல்தவம் புரிகுவார் வினைஎனும் சிறைதுறந்து

毫y 7

உயர்பதம் விரவினார் (முனைவர் - முனிவர்; இனையர் - இவர்கள்: உறுவர் - சேர்வர்; சிறை - கட்டு, துறந்து - நீங்கி; உயர்பதம் - மோட்சம்) என்ற பாடற்பகுதி மட்டுமே போதும். இதற்கு

(3) பிராட்டியைத் தேடுவதற்குத் தென்திசைக்கு அனுப்பப்பெற்றவர்களுள் அநுமன் முக்கியமானவன். தன்மீது அளவற்ற பக்தி கொண்டிருப்பதை இராமனே நன்கு அறிவான். அதனால் அவனிடம் பிராட்டியின் அவயவங் களை வருணித்தும்', சில அடையாளங்களை அவனுக்குக் கூறியும்', கணையாழி தந்தும்" அனுப்புகின்றான்.

(4) சுயம்பிரபையிடம் தம்மை (வானரவீரர்களை) அறிமுகப்படுத்தும்போது ஏதமில் அறத் துறை நிறுத்திய இராமன், தூதவர் " என்கின்றான். அஃதாவது திருமால்

5. கிட்கிந்தை - நட்புக்கோள் - 3 - 5 6. கிட்கிந்தை - நட்புக்கோள் - 6 - 12 7. கிட்கிந்தை - நட்புக்கோள் - 12 8. கிட்கிந்தை - நாடவிட்ட - 33 - 65. 9. கிட்கிந்தை - நாடவிட்ட - 67 - 72 10. கிட்கிந்தை - நாடவிட்ட - 73 11. கிட்கித்தை - பிலம்புக்கு - 53