பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. கவிக்கு நாயகன்

சீதாப்பிராட்டியைத் தேடிக்கொண்டு இலங்கை நகர் முழுவதும் தேடிச் செல்லும் அநுமன் கும்பகர்ணனின் உறையுள் சென்று அதனைக் கடக்கும் நிலையைக் கூறும் கம்பநாடன்,

"செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் அனையவன்

உறையுளைக் கடந்தான்' என்று கூறுவான். இப்பகுதிக்கு அடியிற்கண்ட மூன்று பொருள்கள் கிடைக்கின்றன.

(1) வான்மீகத்திலுள்ள இராம சரித்திரத்தைத் தேவையான இடங்களில் மாற்றி - திருந்தச்செய்து - கேட்போர் செவிக்கு இனிமையாக இருக்குமாறு - தேனாக இருக்குமாறு - செய்த கவிக்கு நாயகன் - கவிகளுக்கெல்லாம் தலைவன் - கவிச்சக்கரவர்த்தி - கம்பநாடன் என்பது ஒன்று.

இதனை நாம் ஈண்டுக் கருதவில்லை. (2) இராமபிரானது புகழ் அமிழ்தம் கேட்பவர் செவிகளுக்கு இனிமை தரும், தேனாக இனிக்கும்'; 'இராமபிரானது புகழைத் தனது செவிகளுக்குத் தேனாக அழகியதாகக் கொள்ளும் கவிக்கு நாயகன் - வானரத் தலைவன் என்பது இரண்டு.

1. சுந்தர - ஊர்தேடு. - 132

2. எந்தெந்த இடங்களிலெல்லாம் இராமகதை சொல்லப் பெறுகின்றதோ அந்தந்த இடங்களிலெல்லாம் அதுமன் தலைமேற் கூப்பிய கையனாய் நின்று ஆனந்தக் கண்ணிர் ததும்ப, அச்சரித்திர அமிழ்தத்தைச் செவியிலேற்றுப் பருகிக் களிக்கின்றனன் என்று சொல்லுவார், இராம பக்தர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/14&oldid=1509138" இலிருந்து மீள்விக்கப்பட்டது