பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 அண்ணல் அநுமன்

"ஒதம் ஒத்தனன் மாருதி

அதன.அகதது உறையும நாதன் ஒத்தனன் என்னிலோ

துயில்கிலன் நம்பன் வேதம் ஒத்தனன் மாருதி

வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்வேறு

இதனில்லை பொருவே"' (ஒதம் - கடல் நாதன் - திருமால் வேதத்தின் சிரம் - உபநிடதம் போதம் - பரம்பொருள்)

இங்கு அநுமனது இராமபக்தியை இணை இணையாக ஒப்பிட்டுக் காட்டி, தன்னை மறந்த நிலையில் தனது பக்தியின் அருமையையும் அற்புதமாகக் காட்டுகின்றான், கம்பன்.

பக்தியின் சிறப்பு : முதற்போர் நடைபெற்ற பொழுது ஒருநிலையில் இராவணன் இலக்குவன்மீது வேற்படையை எறிகின்றான். அஃது அவன் மார்பிற் பாய அவன் அயர்ந்த நிலையில் உள்ளான். அவனுடலைத் துக்கிச் செல்வதற்காக "நஞ்சினால் செய்த நெஞ்சினான் நடந்தான்.”* வந்தவன் தனது இருபது கைகளினாலும் இலக்குவன் உடலைத் துக்க முயலுகின்றான்.

"வெள்ளி யங்கிரி எடுத்தனன்

வெள்கினான் என்ன எள்ளில் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.""

(எள் இல் - குற்றமற்ற) துக்க முடியவில்லை.

"தொடுத்த எண்வகை மூர்த்தியைத்

துளக்கிவெண் பொருப்பொடு எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்'

27. யுத்த முதற்போர் - 227 28. யுத்த முதற்போர் - 208

29. யுத்த. முதற்போர் - 209 30. யுத்த முதற்போர் - 209