பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 அண்ணல் அநுமன்

இங்கு இளைய பெருமாள் அநுமனுக்கு இலேசாக இருந்ததற்குக் காரணம், அந்த அநுமன் மிகுந்த பக்தியுடையவனாக இருப்பதுபற்றியேயாகும். "நண்பெனும் தனித்துணை யதனால் அகவு காதலால்" என்ற பாடற்பகுதி இதனைத் தெளிவுறுத்துகின்றது.

ஒர் ஆழ்வார் பாசுரம் நினைவிற்கு வருகின்றது.

"தேவுமற்று அறியேன், குருகூர் நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே"'

மதுரகவி ஆழ்வார் ஆண்டவனைப் பாடாது அடியாரைப் பாடியவர். அவர் இவ்வாறு காட்டுவார். அவர் மறைந்துவிட்டார்; ஆனால், நம் மனத்தில் வாழ்கின்றார். அநுமனோ இராமநாமத்தைச் செபித்துக்கொண்டு இன்றும் நம்மிடையே வாழ்கின்றான். அவன் சிரஞ்சீவியாதலால், அவன் நம் ஊனக் கண்ணுக்குப் புலப்படாவிடினும் மனக் கண்ணுக்குப் புலப்படுகின்றான். பல மனிதர் உடலில் வாழ்ந்துகொண்டு பசனையில் இராமநாம சங்கீர்த்தனம் நடைபெறும் போதெல்லாம், குதித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டு வாழ்ந்துகொண்டுள்ளான்.

33. கண்ணிநுண் - 2