பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 அண்ணல் அநுமன்

இத்தகைய பெருமை வாய்ந்த கோதில் சிந்தை அநுமனின் குணநலன்களை நாமும் ஆய்ந்து காண முயல்வோம்.

1. அடக்கம் : "அடக்கம் அமரருள் உய்க்கும் " என்ற பொன் மொழியை நன்கு உணர்ந்த சீலன்.

(1) தசரதன் புதல்வர்களை முதன் முதலில் சந்திக்க விரும்பியவன் ஒரு பார்ப்பன மாணி உருவம் கொண்டு வருகின்றான். இதிகாசங்களிலும் புராணங்களிலும் பார்ப்பன வடிவமே அடக்கத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளப் பெறுகின்றது. முதலில் சந்திக்கும் போதே,

"கவ்வையின் றாக

நுங்கள் வரவு என்று அடக்கத்துடன் பெளவியமாகக் கூறி வரவேற்கின்றான்.

(2) அங்கதனுக்கு அறிவுரை கூறி அனுப்பியபோது, அநுமனுக்கும் விடைகொடுக்கின்றான், இராமன். அப்போது வாயு குமாரன்,

"இத்தலை இருந்து நாயேன்

ஏவின எனக்குத் தக்க கைத்தொழில் செய்வேன் என்று கழலிணை வணங்கி”*

வேண்டிய பொழுது சக்கரவர்த்தித் திருமகன் அவனை நோக்கி, "அறிவு, ஆண்மை, பெருமை என்ற மூவகைத் திறனும் நிரம்பிய ஒருவனது அரசை மற்றொருவன் எளிதில் கொண்டால் அப்போது அங்கே நன்மையே யன்றித் தீமையும் விளையக்கூடும்; அவ்வரசு உன்னைப் போன்ற அறிஞர் தாங்கவே நிற்கும். ஆகவே, அறமே வடிவெடுத்தாற் போன்ற நீ, சுக்கிரீவன் ஆட்சியை நிலைநிறுத்திப் பின்னர் என் காரியத்தைச் செய்யலாம்” என்று அறிவுரை கூறி அனுப்புகின்றான். இதில் அநுமனின் அடக்கப் பண்பையும் அறிவுத் திறனையும் ஒருங்கே காணலாம்.

5. கிட்கிந்தை - கிட்கிந்தைப் - 26 6. குறள் - 12 (அடக்கம் உடைமை) 7. கிட்கிந்தை - அதுமப் - 16 8. கிட்கிந்தை - அரசியல் - 27