பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 அண்ணல் அநுமன்

கட்டளைப்படியே கடல் கடந்து சென்று, பிராட்டியைக் கண்டு, செய்தி உணர்ந்து மீண்டு வருவேன்' என்று பணிவாகக் கூறுவதிலிருந்தும் இவ்வடக்கப்பண்பைக் கண்டு தெளியலாம்.

(4) அநுமனின் வாலைக் கொளுத்திவிடுமாறு இலங்கை வேந்தன் கட்டளையிடப் பாசபந்தத்தை இந்திரசித்து விடுவிக்கின்றான். அரக்கர்கள் கயிறு கொண்டு அவனைப் பிணிக்கின்றனர். அப்பொழுது அநுமன், மிக வலிமையுடைய தனது உடலை வருத்தும் திறன் அக்கயிறுகட்கு இல்லா திருக்கவும், அப்பிணிப்பைப் பொறுக்கும் வலிமை யில்லாதவன்போல் அதற்கு உட்பட்டு அடங்கியிருந்தான்; அரக்கர்கள் இழுத்துச் செல்லும் வழிகளிலெல்லாம் சென்று கொண்டிருந்தான்' அதை யோக முதிர்ச்சியினால் தத்துவப் பொருளையுணர்ந்த ஒரு யோகி, தன்னை மெய்யுணர்வு இல்லாதவன் போல் காட்டிப் பொய்யுணர்வாகிய அவித்தையை மெய்யுணர்வாக மேற்கொண்டு உலகத்தவ ரோடு ஒத்து நடித்தாற்போல் என்ற உவமை கொண்டு விளக்குவன், கம்பன்" பரமுத்தி நேர்கிறவரையில் சீவன் முத்தி இருக்கிற நிலை (சைவம்) இத்தன்மைத்து என்றும் கருதலாம்.

(5) பிராட்டியைக் கண்டு இலங்கையினின்றும் மீண்ட அநுமன்,

"சென்றது முதலா வந்தது

இறுதியாய்ச் செப்பற் பாலை வன்திறல் உரவோய் என்னச்

சொல்லினன்' "

அனைத்தையும் சொன்னவன் சிலவற்றைச் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை?

12. கிட்கிந்தை - மயேந்திரப். - 24 13. சுந்தர. பிணிவீட்டுப். 122 14. எடுத்துக்காட்டுகளாகச் சுகர், சடபரதர், நம்மாழ்வார் போன்றவர்களை இத்திறத்தவர் எனலாம்.

15. சுந்தர. திருவடிதொழுத. - 8