பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 147

"போரில் நீண்டவாள் அரக்க ரோடு

நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி மீண்டதும் விளம்பான் தான்தன்

வென்றியை விளம்ப வெள்கி' " தற்புகழ்ச்சி தன் மேன்மைக்கு இழுக்காதலால், அரக்கருடன் நிகழ்ந்த போரையும் நெருப்புச் சிந்தியதையும் அநுமன் தெரிவிக்கவில்லை. ஆனால், இவற்றை அவர்கள் அறிந்து கொண்டுவிட்டனர். எப்படி?

"பொருதமை புண்ணே சொல்ல

வென்றதைப் போந்த தன்மை உரைசெய ஊர்தி இட்டது

ஓங்குஇரும் புகையே ஒத, கருதலர் பெருமை தேவி

மீண்டிலாச் செயலே காட்ட, தெரிதர உணர்ந்தேம்" "

(கருதலர் - பகைவர்.) அதுமான வகையால் இவற்றையெல்லாம் அநுமனது நிலையைக்கொண்டு உணர்ந்துகொண்டனர்.

2. சமயோசித புத்தி : கார்காலம் கழிந்தவுடன் வருவதாகச் சொன்ன சுக்கிரீவன், சொன்னபடி வாராததால் இராமன் சீற்றங்கொண்டு நிலைமையை அறிந்து வருமாறு இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புகின்றான்.

"அஞ்சில் ஐம்பதில் ஒன்றுஅறி யாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்."" என்பது இராமன் வாக்கு. இலக்குவன் வேகமாக வருகின்றான்; ஏழு மராமரத்தைத் துளைத்துச் சென்ற இராமபாணம் போல் வேகமாக வருகின்றான்."

16. சுந்தர. திருவடிதொழுத: - 9 17. சுந்தர. திருவடிதொழுத. - 10 18. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 5. அஞ்சில் ஒன்றும் அறியாதவன் ஐம்பதிலும் ஒன்றும் அறியாதவன். இளமை முதுமை என்னும் வேற்றுமையின்றி எப்பொழுதுமே, செய்வது அறியாதவன் என்பது இது. இளமையில் ஆராய்ச்சியின்றித் தன் அண்ணனான வாலிபக்கல் தவறுதல் செய்தான்; இப்பொழுது முதுமையில் எனக்குப் பிழை செய்தான் என்றவாறு.

19. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 12