பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 அண்ணல் அநுமன்

(1) தன்னால் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் அநுமனை அடைகின்றான், அங்கதன். இருவரும் தாரையிடம் வருகின்றனர்." நேரிட்ட நிலைக்குத் தாரை கடிகின்றாள்; பழிக்கின்றாள்' ஒருநிலையில் இலக்குவன் கிட்கிந்தை நகரில் பிரவேசிக்கின்றான்' அப்போது அநுமன் கூறிய யோசனை: இலக்குவன் புயவலி மிக்கவனாயினும் அவன் மனம் மலர்போல மென்மையுடையது. பெண்பாலாகிய தாரை சென்று சுக்கிரீவனது அரண்மனை வாயிலில் நின்றுவிட்டால், மகளிரை எதிர்த்துப் பொருது கொல்ல லாகாது என்ற கொள்கையை உணர்ந்த அப்பெருமகன், அவ்வழியைக் கண்ணெடுத்தும் பாராமல் விலகிச் சென்றிடுவன்; இது தக்கதோர் உபாயம் என்று அநுமன் சமயோசிதமான ஆலோசனையைக் கூறினன். அங்ங்னமே தார்குழலார்களுடன் தாரை சென்று இலக்குமணனை விலக்கினாள்:”

மெல்லியலாரின் சேனை இலக்குவனைச் சூழ்கின்றது. அவர்தம் காற்சிலம்புகள் போர்க்குரிய பலவகை வாத்தியங் களாக ஒலிக்கின்றன; அல்குலாகிய போர்க்கு ஏற்ற பெரிய தேர் அவனைக் கவிந்துகொண்டு நிற்கின்றது. மகளிரின் கண்கள் வேற்படைகளாகவும், வெம்புருவம் விற்படை களாகவும் அமைந்துவிடுகின்றன; இங்ங்னம் மெல்லியர் வளைந்த சேனையால் பெருவீரனான இலக்குமணனின் சீற்றம் ஒதுங்கிப் போயிற்று. தன் முகத்தை மாற வைத்துக்கொண்டு திரும்பியதோடன்றி அவர்களைக் கண்னெடுத்துப் பார்க்கவும் அஞ்சினான்."

20. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 27

21. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 28

22. கிட்கிந்தை - கிட்கிந்தைப் - 41

23. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 43, 44

24. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 47. வனவாச காலத்தில் வானர அரசனான சுக்கிரீவன் பிராட்டியின் அணிகலன்களைக் காட்டிய போது இலக்குவன், "யான் பிராட்டியின் தோள் வளையங்களைக் கண்டறியேன்; நாடோறும் அப்பெருமாட்டியின் திருவடிகள்ளப் பணிதலால் அவருடைய நூபுரங்களை அறிவேன்” என்ற வான்மீகம் ஈண்டுக் கருதத்தக்கது.

25. கிட்கிந்தை - கிட்கிந்தைப். - 48