பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 அண்ணல் அநுமன்

இறை - சிறிது தாயர் - சுமித்திரை முதலியோர்; நைந்தான் - வருந்தினான்.)

கைம்பெண் கோலத்துடன் தாரையைப் பார்த்தவுடன், தன் தாயர் (சுமித்திரை, கோசலை) இப்படித்தானே கைம்பெண் கோலத்துடன் இருப்பர் என்று நினைக்கின்றான்; துக்கம் அவன் மனத்தைக் கவிந்துகொள்கின்றது. அயோத்தி யில் தன் குடும்ப வரலாறு மானதக் காட்சியாக மனத்தில் எழுகின்றது."

அநுமன் தன் சமயோசித புத்தியால் இலக்குவன் சீற்றத்தையே மாற்றித் திசை திருப்பியதைக் காண முடிகின்றது.

(2) தன்னைச் சரணடைய வந்த வீடணனைத் தம் பக்கம் சேர்த்துக்கொள்ளலாமா என்று இராமன் வினவும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லி வீடணனைச் சேர்த்துக்கொள்ளலாகாது என்று கூற, அதுமனைக் கேட்கும்போது அவன் சொன்னது சமயோசித புத்தியின் விளைவாக எழுந்ததாகக் கருதலாம்.

அநுமன் மிகப் பணிவாகத் தொடங்குகின்றான். "தும்மைப் போன்ற அறிவாளிகட்கு அற்ப அறிவுடைய எங்களுடைய ஆலோசனையைக் கேட்க வேண்டிய இன்றியமையாமை இல்லை; ஆதலால், எம்மைப் போன்ற வானரர்களைத் துணையாகக்கொண்டு ஆலோசனை கேட்கின்றீர்” என்று கூறிவிட்டு அநுமன் தலைவணங்கி வாய் பொத்திக்கொண்டு கூறுகின்றான். இங்கே கம்பன் இவனை 'துணங்கிய கேள்வியான் என்று குறிப்பிடுவதிலிருந்து இவனது பெருமை துணியப்பெறும். இவனுடைய பேச்சு சித்தாந்தமாக இருக்கும் எனக் கருத்தினால், இவனை இராமன் இறுதியாகக் கேட்டனன் என்று கருதலாம். வள்ளுவர் பெருமானும்,

"நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.”

28. இராமலக்குமணர்கள் கானகம் ஏகிய பின்னர்தான் தசரதன் மரிக்கின்றான். ஈமச்சடங்குகூடச் செய்ய அவர்களுக்கு வாய்ப்பில்லை. இலக்குவன் தன் தாயர் மங்கல நாண் கழற்றியதைப் பார்த்தறியாதவன்.

29. குறள் 419 (கேள்வி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/151&oldid=1361340" இலிருந்து மீள்விக்கப்பட்டது