பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 153

(ஒ) மகளிரைக் கொல்லுதலும், வீரத்தினின்று நீங்கிய இழிந்தோரைக் கொல்லுதலும், நமக்குக் கேட்டைச் செய்தாலும் தூதுவரைக் கொல்லுதலும் குற்றமற்ற செய லன்றாம் என்று அதற்கு ஏற்றனவான சிறந்த ஏதுக்களை இந்த வீடணன் தன் அண்ணனுக்கு எடுத்து அறிவித்தான் (98);

(ஒள) நான் இலங்கை சென்றிருந்தபோது இராப் போதில் நான் இவன் மாளிகையில் (முதன் முறை) சென்ற காலத்திலும், (பிறகு அந்த மனைப்பக்கமாகத் திரிந்த காலத்திலும்) பல நன்னிமித்தங்கள் தோன்றின; அதுவல் லாமலும் இவனைப்பற்றி அறிந்துள்ளது ஒன்றுண்டு: (99);

(க) இவன் மனையில் கள்ளும் இல்லை; இறைச்சியும்

இல்லை. இவனது இல்லம் அந்தணர் இல்லம் போல் விளங்கிற்று (100);

(ங்) இந்த வீடணனின் மகள் திரிசடை பிராட்டி சீதை மிகவும் வருந்திய நிலையில் இருந்தபோது நான்முகனின் சாபம் ஒன்றுள்ளது; அதனால் கெடுமதியையுடைய இராவணன் உன்னைத் தீண்டினால் உடனே யமன் அவனைச் சேர்வான் என்று சொல்லித் தேற்றுவித்தாள் (101);

(ச) இந்த வீடணன் தனக்குப் பற்றுக்கோடாக இருந்த இராவணனது வரம் முதலியன நின் வில்லிலிருந்து புறப்படும் சரங்களால் தீர்ந்துபோகும் என்று நினைத்து விரைந்து வந்துள்ளான்; இவன் பெருவரங்கள் பெற்றிருத்தலோடு கருணையும் வாய்க்கப்பெற்றிருத்தலால் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் (102);

(ஞ) நீர் ஒருவரே அனைத்து அரக்கர்களையும் அழித் தொழிக்கும் திறமை வாய்ந்தவர். அப்படிப்பட்ட நீர் எளிமையான இவனால் என்ன நேருமோ? என்று ஐயுற இடன் உண்டோ? கடலின் நீரைக் கிணற்று நீர் கொள்ளாதவாறு போல, இவனால் நுமக்கு ஒரு தீங்கும் செய்யமுடியாது என்பது திண்ணம்; உன்னையன்றிவேறு எவராலும் செய்ய முடியாத இராவண சங்காரத்திற்குத் துணையாயிருக்க விரும்பி ஆபத்துக் காலத்தில் அபயம் வேண்டும் என்று வரும் இவனை, ஐயுறாமலே கைக்கொள்ளுதலே தக்கது 0ே3);