பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 அண்ணல் அநுமன்

(ண) அண்ணனால் துரத்தப்பெற்ற தனக்குத் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் கவலைப்பட்டு, இவன் நம்மை வந்தடைந்தபோது இவனைச் சேர்த்துக்கொள்ளாமல் இவன் பகைவரைச் சேர்ந்தவன். இவன் மனம் பகைவரான இராவணாதியரை வெல்ல வேண்டுமென்று இராது. ஆகவே, இவனை நம்பி அங்கீகரிக்கலாகாது என்று சொல்வது அரச நீதி தெரிந்தோர் சொல்லும் சொல்லன்று; அவர்கள் கேட்பின் சிரிப்பார்கள்; ஒருவர்க்கொருவர் பங்காளிகளாய் அன்பு பூண்டவரான தந்தையார், தமையன்மார், தம்பிமார் என்ற இவர்களே பொருள் நிமித்தம் மாறுபாடு பூண்டு ஒருவரையொருவர் கொல்லப்பார்ப்பதைக் கண்கூடாகக் காணவில்லையா? என்றனன் (104).

(ட) இவ்வாறு இருத்தலினால், இந்த வீடணனுடைய வருகை நல்ல எண்ணத்துடன் கூடிய வருகையே என்று உமக்கு அடியனான யான் அறிந்துள்ளேன்; உம்முடைய வேத நூல் எனத் தகைய திருக்குறிப்பை அறியேன் என்று சொல்லி முடித்தான், அநுமன் (105).

இங்கும் மாருதி தன் சமயோசித புத்தியால் இராமன் உகக்குமாறு வீடணனைப்பற்றி நல்முறையில் எடுத்துக் கூறியதைக் காணமுடிகின்றது.

இராமனும் அதுமன் கூறியவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்து,

"மற்றினி உரைப்ப தென்னோ

மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி யன்னது

அன்றெனில் பிறிதொன் றானும் வெற்றியே பெறுக தோற்க

வீக வீயாது வாழ்க பற்றுதல் அன்றி உண்டோ

அடைக்கலம் பகர்கின் றானை"' என்று கூறி, மேலும் தன் முடிவைத் தக்க காரணங்கள் காட்டி வீடணனை ஏற்றுக்கொண்டான்.

32. யுத்த. வீடணன் அடைக்கலப். - 10