பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 155

(3) பிராட்டியைக் காண முடியாமல் வாணர வீரர்கள் வருந்திக் கூறத் தொடங்கினர்.” அங்கதன் இறக்கத் துணிகின்றான்.' சாம்பவான் அது கூடாது எனத் தடுத்து நிறுத்துகின்றான்." அநுமன் அவ்வமயம் பேசிய பேச்சு அவனது சமயோசித புத்தியைப் புலப்படுத்துகின்றது. "தேட வேண்டிய இடம் இன்னும் அதிகமாக உள்ளது. சிறிது தேடினவிடத்துப் பிராட்டி கிடையாமையைக்கொண்டே உயிர்விடத் துணிவது சிறிதும் தகுதியன்று. பிராட்டியைத் தேடுதல் இன்றியமையாத செயலாதலால், காலம் கடந்தமைக்குச் சிறிதும் கலங்க வேண்டா. மேற்கொண்ட செயலில் ஊக்கம் கொள்ளுதலே தக்கது. அவ்வாறு செய்தொழிலை நாம் இனிது முடிப்பின், சுக்கிரீவனும் நமது செயலுக்கு மெச்சுவனேயன்றி, ஒரு கடுஞ்சொல்லையும் சொல்லான். ஆகவே, இனியும் தேடுதலே தகுதியாகும். பின்னும் தேடியும் பிராட்டி அகப்படாவிட்டால், பிராட்டிக்கு நேர்ந்த துன்பத்திற்காக இராவணனை எதிர்த்துச் சென்று, நடைபெற்ற போரில் உயிர் விட்ட சடாயுவைப் போல் உயிர் விடுதல் பெருமை. அவ்வாறு செய்யாமல் இப்போதே உயிர் விடுதல் பெரும் பழிப்பை உடையதாகும்" என்று கூறினன்.

(4) சம்பாதி சடாயுவைக் கொன்றவர் யார்? என்று வினவச் சமயோசித புத்தியையுடைய மாருதி, "உன்னைப் பற்றியே நீ உள்ளபடியே கூறினால், பின்னை நடந்த வரலாற்றை விவரித்தல் தவறுதல் இல்லாததாகும்" என்று சம்பாதியை நோக்கிக் கூறினன். எருவை வேந்தனும் தன்னைப் பற்றி அநுமனுக்குச் சொல்லத் தொடங்கினான்." அவனை நோக்கி, "என் பின் பிறந்தவனாகிய துணையைப் பிரிந்த ஏழ்மையுடைய நான் முன் பிறந்தேன்” " என்று விளங்கக் கூறினன். இதனைச் செவி மடுத்த மாருதி, மிக்க துன்பக்

33. கிட்கிந்தை. சம்பாதிப். 3, 4 34. கிட்கிந்தை. சம்பாதிப். 12 - 16 35. கிட்கிந்தை. சம்பாதிப். 17, 18 36. கிட்கிந்தை. சம்பாதிப். 19 - 21 37. கிட்கிந்தை. சம்பாதிப். 30 38. கிட்கிந்தை. சம்பாதிப். 31