பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 அண்ணல் அநுமன்

கடலில் மூழ்கிப் பின் தெளிந்து, பின்னர் 'இராவணன் வீசிய வாளாயுதத்தால் நின் தம்பிக்கு மரணம் நேர்ந்தது" என்று விளங்கக் கூறினன்.

3. பொறையுடைமை : அநுமனைப் பொறையுடை மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

"மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

says 38

தகுதியால் வென்று விடல் என்பது வள்ளுவர் வாக்கு மனச்செருக்கால் தங்கட்குத் தீயவற்றைச் செய்தாலும், அதனைப் பொறையுடைமையால் வென்றுவிடுக என்பது அப்பெருமானின் அறவுரை. வாலி சுக்கிரீவனுக்கு இழைத்த தீங்குகள் மிகப்பல. அவற்றை எதிர்த்துச் சமாளிக்கத் தன்னிடம் ஆற்றலிருந்தும் அதனைப் பொறையுடைமையால் பொறுத்துக்கொண்டு காலமும் இடமும் வந்து சேரும் என்று பொறுமையுடன் காத்திருக்கச் செய்கின்றான், சுக்கிரீவனை.

இராமபிரான் வருகையைச் சுக்கிரீவனுக்குத் தெரிவிப்பதைக் கம்ப நாடன்,

"மேலவன் திருமகற்கு

உரைசெய்தான் விரைசெய்தார் வாலியென்று அளவிலா

வலியினான் உயிர்தெறக் காலன்வந் தனன்இடர்க்

கடல்கடந் தனம் எனா ஆலம்உண் டவனின்நின்று

அருநடம் புரிகுவான்."" என்று காட்டுவான். அநுமன் உருத்திரமூர்த்தி போல் ஆனந்தக் கூத்தாடிச் செய்தியைத் தெரிவிக்கின்றான். இராம லக்குமனர்களை வாலியால் அனுப்பப்பட்டவர்கள் என்று வெருவியோடி மலை முழைஞ்சினுள் ஒளிந்துகொண்ட சுக்கிரீவனை அநுமன் அவர்களுடன் சேர்த்து வைத்தது அதுமனது திறமைக்கும் பொறையுடைமைக்கும் சிறந்ததோர்

39. குறள் - 158. (பொறையுடைமை) 40. கிட்கிந்தை. நட்புக்கோள் - 2