பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 157

எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாகும். பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பது மக்கள் பேச்சில் தாண்டவம் ஆடும் பொருள் பொதிந்த வாசகம்.

(1) இராமலக்குமணர்களின் தன்மையைப் பொறுமையாக எடுத்துக் கூறுகின்றான், காற்றின் மைந்தன்.

(அ) அவ்வீரர்கள் இந்நில உலகத்தில் உள்ளவர்களும், விண் உலகத்திலுள்ளவர்களும் இவற்றிற்கு மாறாகப் பாதாள லோகத்திலுள்ளவர்களும், மற்றை லோகத்திலுள்ளவர்களும், எட்டுத்திக்கிலுள்ளவர்களும் ஆகிய இவர்களுடைய மனத்திலுள்ளவர்களும், செயலில் உள்ளவர்களும், சொல்லில் உள்ளவர்களும், கண்ணாக உள்ளவர்களும் ஆனவர்கள், பகைவர்களையுடையவர்களும், அப்பகைவர் களால் செய்யப்பெற்ற மிகவும் அதிகமான விவரணங்களை யுடையவர்களுமாய்த் தம்மை அடைந்தவர்களது அருமையான உயிருக்கு அமிழ்தம்போல் உள்ளவர்கள்."

(ஆ) இவர்கள் தசரத சக்கரவர்த்தியவர்களின் திருக் குமாரர்கள், பேரறிவுடையவர்கள், கட்டழகு வாய்க்கப் பெற்றவர்கள், உனக்கு முறைமையால் எளிதாக அரசாட்சியைத் தந்து உதவுவார்கள்."

(இ) நீதி நெறியில் நிற்பவர்கள் கருணை வடிவான வர்கள். சன்மார்க்கத்தினின்றும் மாறுபடாத உறுதியுடைய வர்கள்; எல்லோரையும்விடப் பெருமையுடையவர்கள்; இயல்பாகவே வரையறைப்படாத அறிவையுடையவர்கள்; மிகு புகழ் உடையவர்கள்; விசுவாமித்திர மாமுனிவரின் ஆசி பெற்றவர்கள் கடல் போலப் பரந்த கடவுள் வெம்படைகளை யுடையவர்கள்.

(2) அடுத்து இராமனது பெருமையைப் பகர்ந்து வானர அரசனுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயல்வதில் மாருதியின் பொறுமையைக் காணமுடிகின்றது.

41. கிட்கிந்தை - நட்புக்கோள் - 3. எம்பெருமான் அந்தர்யாமியாய் எங்குமுளனாதலால், அக்கடவுளின் அவதாரமான இவர்களை எங்கும் உள்ளவர்களாகக் கூறினார்.

42. கிட்கிந்தை - நட்புக்கோள். - 4

43. கிட்கிந்தை - நட்புக்கோள் - 5