பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 அண்ணல் அநுமன்

(அ) தாடகையை வதம் செய்தவன்; அவள் மகன் சுபாகுவைக் கொன்றவன்; தன் திருவடித் துரளியினால் கல்லின் வடிவமாய்க் கிடந்த அகலிகைக்கு உண்மை உருவத்தை அருள் செய்த பெருமான்: '

(ஆ) இராமன் நல்லுறுப்புகள் அமைந்த நம்பி; மிதிலையில் சிவதனுசை இறுத்துச் சீதாப்பிராட்டியை அடைந்தவன்;"

(இ) தந்தை தயரதன் உதவ, சிற்றன்னை பணித்தருள, அரச செல்வத்தைத் தம்பி பரதனுக்கு நல்கி இந்த இடத்திற்கு எழுந்தருளியவன்."

(ஈ) பரசுராமனது வலியை அடக்கியவன்; விராதன் என்னும் அரக்கனை வதைத்தவன்."

(உ) இன்னும் இப்பெருமகன் கரன் முதலிய கருணையற்ற அரக்கர்களுடைய கடல் போன்ற சேனைகளை அழித்தவன்; எல்லாத் திக்குகளிலுள்ள பகைவர்களையும் அழித்தருள்பவன்;"

(ஊ) இவன் மானுட வடிவெடுத்து வந்த பாற்கடலி லுள்ள பரமபதநாதன், மாயமானாக வந்த மாரீசனுக்கு யமனானவன்;"

(எ) தன்னிடத்துப் பக்தியுடைய சபரிக்கும், தன்னை விழுங்க முயன்ற கவந்தனுக்கும், வேறுபாடு இன்றி உயர் பதவியளித்த உத்தமன்."

முனிவர் முதலியோர் இவ்விருவரது வருகையைக் குறித்துத் தவம் செய்கின்றதனால், இவர்கள் தீயோரை அழித்து நல்லோரைக் காக்கத் திருவவதரித்த முதற்கடவுள் என்று கூறி அவர்களுடன் நட்பு ஏற்படுத்தியவன்.

44. கிட்கிந்தை - நட்புக்கோள். 6 அகலிகை கெளதம முனிவரின் மனைவி; சதானந்தரின் அன்னை.

45. கிட்கிந்தை - நட்புக்கோள். 7 46. கிட்கிந்தை - நட்புக்கோள். 8 47. கிட்கிந்தை - நட்புக்கோள். 9 48. கிட்கிந்தை - நட்புக்கோள். 10 49. கிட்கிந்தை - நட்புக்கோள். 11 50. கிட்கிந்தை - நட்புக்கோள். 12