பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குணக்குன்றன் 159

(3) இராமன் வாலியைக் கொல்ல வல்லவன் என்பதைப் பொறுமையுடன் பல கூறி மெய்ப்பிக்கின்றான்.

(அ) இராமனது திருக்கைகளிலும் திருத்தாள்களிலும் சங்கு சக்கரக் குறிகளிருப்பதால், அவன் இராமனாக அவதரித்த திருமாலே!"

(ஆ) சீதையின் திருமணத்திற்காகச் சிவதனுசை ஒடிக்கும் அற்புத ஆற்றல் திருமாலுக்கேயுடையதேயன்றி வேறு எவர்க்கு இருக்க முடியும்?"

(இ) என் தந்தையாகிய வாயு பகவான் ஒருமுறை என்னை நோக்கி 'உனக்கும் எனக்கும் நல்ல பதவி கிடைக்குமாறு திருமாலுக்கு அடிமை செய் எனக் கூறினன்; அத்திருமாலே யான் செய்யும் அடிமைத் தொழிலை ஏற்றுக் கொள்ளுமாறு இப்போது வந்துள்ளான். இதற்கு வேறொரு காரணமும் உள்ளது:”

(ஈ) நீ திருமாலுக்கு அடிமை செய்' என்று எந்தை கூறியபோது, இவன்தான் திருமால் என்று அறிவது எப்படி? என்று வினவியபோது, அதற்கு எந்தை அத்திருமால் உன் எதிரே வரும்போது, உனக்கு அவனிடத்தில் யாதொரு காரணமும் இன்றிப் பேரன்பு உண்டாகும்; இதுவே அப்பெருமானைக் கண்டறிவதற்குரிய நெறி' என அடையாளம் கூறினான். அஃது இப்போது ஒத்திருப்பதனால் இவன் அத்திருமாலே எனத் துணியலாம்.""

(உ) மற்றும் அப்பெருமானின் பெருவலியின் தன்மையை அறிய விரும்பினாலும் இங்கிருந்து நமது இருப்பிடத்திற்குச் செல்லும் வழியிலுள்ள மராமரம் ஏழினையும் ஒரம்பு கொண்டு துளைக்கச் சொல்லி, அந்த அம்பு ஊடுருவிச் செல்வதைப் பார்த்தால், வாலியைக்

51. கிட்கிந்தை - நட்புக்கோள். 79

52. கிட்கிந்தை - நட்புக்கோள். 80

53. கிட்கிந்தை - நட்புக்கோள். 81. இங்குக் கூறப்பட்டிருப்பது பிறிதோர் இடத்தில் கூறப்பெற்றிருந்தாலும், அதைக் கூறியது கூறலாகக் கொள்ளற்க விளக்கத்திற்காகத் திரும்பவும் கூறப்பெற்றதாகக் கொள்க.

54. கிட்கிந்தை - நட்புக்கோள். 82