பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 அண்ணல் அநுமன்

" தலைமை யோடுநின் தாரமும்

6

உனக்கின்று தருவென்

எனபது இராமனது திருவாக்கு உறுதிமொழி. இங்ங்னம் அநுமன் வாலி வதத்திற்கு வழியமைத்தலால் இராமகாதை இனிது நடைபெற வழி அமைகின்றது.

(3) பிராட்டியைத் தேட நான்கு திசைகளிலும் வானர சேனைகளுடன் வீரர்களை அனுப்புகின்றான், சுக்கிரீவன். தென்திசைக்கு அங்கதன் தலைமையில் அநுமன், சாம்பவான் ஆகியவர்களுடன் இரு வெள்ளச் சேனையை அனுப்புகின்றான். சிறப்பாகத் தென்திசையில் தேட வேண்டிய இடங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அனுப்பு கின்றான். அநுமனிடம் பிராட்டியைப்பற்றிய அடையாளங் களைக் கூறித் தன் கணையாழியையும் தருகின்றான், இராமன். வானரர் பல இடங்களில் பிராட்டியைத் தேடிக்கொண்டு மகேந்திர மலைக்கு வருகின்றனர்; சம்பாதியைக் காண்கின்றனர்; பின்னர் அவனால் இலங்கைக்கு வழி அறிகின்றனர். அநுமன் பேருருவம் கொண்டு இலங்கையை நோக்கி வான் வழியாகப் புறப்படுகின்றான். இலங்கையில் அசோக வனத்தில் பிராட்டியைக் கண்டு அவளிடம் 'சூளாமணி' பெற்றுப் பல்வேறு போர்கள் செய்து வெற்றி வாகையுடன் இராமனை அடைகின்றான். சீதையைக் கண்டதாக விரிவாகக் கூறும் கவிதைகள் யாவும் உள்ளத்தை உருக்குபவை. அவற்றிலுள்ள,

" உன்பெருந் தேவி என்ற

உரிமைக்கும்" (59) " உன்குலம் உன்ன தாக்கி

என்குலம் எனக்குத் தந்தாள்" (61) 'இற்பிறப்பு என்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்" (62)

6. நட்புக்கோள் - 70 7. சம்பாதி - நன்றாகப் பறப்பவன் என்று பொருள் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/17&oldid=1509143" இலிருந்து மீள்விக்கப்பட்டது