பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிக்கு நாயகன் 17

"வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய் காலையும் மாலை தானும்

இல்லதோர் கனகக் கற்பச் சோலைஅங் கதனுள் உம்பி

புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய!

தவம்செய்த தவமாம் தையல்" (64) "சோகத்தாள் ஆய நங்கை

கற்பினால் தொழுதற்கு ஒத்த மாகத்தார் தேவி மாரும்

வான்சிறப்பு உற்றார் மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன்

மகுடத்தாள் பதுமத் தாளும் ஆகத்தாள் அல்லள் மாயன்

ஆயிரம் மோலி யாளல்" (67)* என்ற பாடல் தொடர்களும் பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை; சொல்லின் செல்வனின் வாக்கு வன்மைக்குச் சான்றாகத் திகழ்பவை. அநுமன் பிராட்டியைக் கண்டு செய்தியை இராகவனுக்குச் சொல்லியிராவிடில், இராம காதை அவலத்தில் முடிய ஏதுவாயிருந்திருக்கும்.

(4) மருத்துமலை கொணர்தல் : இருமுறை அநுமனால் மருத்துமலை கொணரப்பெறுகின்றது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போயிருப்பின் இராமகாதை செவிக்குத் தேனென இனித்திராது. துன்பக் கதையாக முடிந்திருக்கும்.

(அ) முதல் முறை : மகரக் கண்ணன் முதலியோரின் வதைக்குப் பிறகு இந்திரசித்தன் போர்க்களம் புகுகின்றான். இலக்குவனுக்கும் இந்திரசித்துக்கும் கடுமையான போர் நிகழ்கின்றது. இராமன்கூட இலக்குவனின் போர்த்திறத்தை

8. இவற்றிலுள்ள பாடல்களின் எண்கள் திருவடி தொழுத படலத்தில் உள்ள பாடல்களின் எண்கள் (வை.மு.கோ. பதிப்பு)

9. மகரக் கண்ணன் : மகராட்சன் என்பதன் பரியாயம். இவன் மகரம் போன்ற கண்ணையுடையவன் என்பது பொருள். இவன் கரனுடைய மகன். படைத்தலைவர்கள் இறந்தொழிந்ததைக் கேட்ட