பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 அண்ணல் அநுமன்

வியந்து போற்றுகின்றான். அவன் ஆரவாரம் செய்யுமாறு வானரர்கட்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே செய்கின்றனர்." ஒரு நிலையில் இந்திரசித்து எவரும் உணராதவாறு வானத்தில் மறைந்திருக்கின்றான். இந்நிலையில் மகோதரனின் மாயப் போரினால் இந்திரன், தேவர் முதலியோர் வானரர்மீது பொரவருவது போன்ற ஒரு மாயத்தோற்றம் நிகழ்கின்றது." இதைப்பற்றி இலக்குவன் வினவிக்கொண்டிருக்கையில் இந்திரசித்து இலக்குவன்மீது நான்முகன் கணையை விடுகின்றான். அதனால் இலக்குவன் அறிவொடுங்குகின்றான்; அநுமனும் சோர்ந்து விழுகின்றான்." வானர சேனை முழுவதற்கும் இதே நிலைதான். உணவு கொண்டுவரச் சென்ற வீடணன் திரும்பிய நிலையில் அனைத்தும் நான்முகன் கணையின் விளைவு என்பதை உணர்ந்து கழுவாய் காண முயல்கின்றான். முதலில் அதுமனைக் கண்டு, அவனுடைய உடலம்புகளைக் களைந்து அவனுடைய அயர்ச்சியைப் போக்குகின்றான்." சாம்பவானைக் கண்டால் வழி பிறக்கும் என்று கருதி அநுமனும் வீடணனும் அவனிடம் வருகின்றனர்." அதுமனைக் கண்ட சாம்பவான் "இனி யாவரும் உய்ந்தோம்" என்று கூறி மகிழ்கின்றான்."

மருந்து கொணரும் பொறுப்பு அதுமனால்தான் முடியும் எனக் கூறி, மருத்துமலை உள்ள இடத்திற்கு

இராவணன் வருந்தியபோது, இவன் தன்னை ஏவின் தன் தந்தையைக் கொன்ற பழம் பகைவனைக் கொன்று தீர்வதாகச் சொன்னதால் இராவணன் இசைவு தர, இருபது வெள்ளச் சேனையுடனும் இரக்தாட்சன், சிங்கன் என்ற தேர்ச்சக்கரக் காவலர்கள் உடன்வரப் போர்க்களத்துக்குச் சென்றவன்.

10. யுத்த பிரமாத்திரப் - 79

11. யுத்த பிரமாத்திரப் - 170

12. யுத்த. பிரமாத்திரப் - 173, 174

13. யுத்த மருத்துமலைப்பட - 11, 12 14. யுத்த மருத்துமலைப்பட 19 15. யுத்த, மருத்துமலைப்பட - 20