பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிக்கு நாயகன் 19

வழிவிவரங்களைத் தருகின்றான்." அநுமன் பேருருவம் கொண்டு புறப்படுகின்றான்." பல இடங்களைக் கடந்து இறுதியில் மருத்துமலையை அடைகின்றான்." அதனை வேருடன் பெயர்த்தெடுத்துக் கையிலேந்திக்கொண்டு விரைந்து திரும்புகின்றான்.

" இங்குநின்று இன்னன

மருந்தென்று எண்ணினால் சிங்குமால் காலம்என்று

உணர்ந்த சிந்தையான் அங்கது வேரொடும்

அங்கை தாங்கினான் பொங்கிய விசும்பிடைக்

கடிது போகுவான்."" (இன்னன - இன்னவை, விசும்பு - ஆகாயம்) வாயு பகவான் அநுமன் கொண்டுவரும் மலையின் மீதுள்ள மருந்தில் பட்டு வீசிச் சுக்கிரீவன் முதலியோரை ஆர்த்தெழுமாறு செய்துவிடுகின்றான். இலக்குவன் உயிர் பெற்று எழுகின்றான். இராமன் தன் தம்பியைத் தழுவி மகிழ்கின்றான்.

(ஆ) இரண்டாம் முறை : மூலபலம் வதை முடிவுற்றதும் இராவணன் தேரேறிப் போர்க்களத்திற்கு வருகின்றான். கடுமையான போர் நிகழ்கின்றது. இலக்குமணனும் இராவணனும் நெருங்கிப் பொருகின்றனர்" இலக்குவனது வலிமை கண்டு இராவணன் மோகனாஸ்திரத்தை விடுகின்றான். வீடணன் யோசனைப்படி இலக்குவன் திருமாலின் படைகொண்டு அதனை அழிக்கின்றான்."

இதனால் இராவணன் தன் தம்பி வீடணன்மீது சீற்றம் கொண்டு அவன்மீது மயன் தந்த வேலை ஏவுகின்றான். அது தன் உயிரை மாய்க்கும் எனத் தெரிவிக்க, இலக்குவன்

16. யுத்த மருத்துமலைப்பட - 24 - 27 17. யுத்த மருத்துமலைப்பட - 30 18. யுத்த. மருத்துமலைப்பட - 60 19. யுத்த மருத்துமலைப்பட - 63 20. யுத்த. வேலேற்ற படலம் - 19, 20 21. யுத்த. வேலேற்ற படலம் 21 - 24