பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 அண்ணல் அநுமன்

'அஞ்சற்க என்று கூறிப் பல அம்புகளைக்கொண்டு தடுக்க முயல்கின்றான், அம்புகளினால் பயன் இல்லை' உடனே அபயங்காத்தற்பொருட்டு இலக்குவன் வேலுக்கு எதிரே நிற்கின்றான். இலக்குவனுக்கு முன்னே வீடணன் புகுபவனானான். அவ்விருவரையும் விலக்கி அங்கதன் முன்னே செல்பவனானான். வானரத் தலைவனான சுக்கிரீவன் அங்கதனை விலக்கித் தான் முன் சேர்பவனாகின்றான்; அதுமன் அவனினும் விரைந்து முந்துபவனாகின்றான். இறுதியாக இலக்குவன் அவ்வேலைத் தன் மார்பில் ஏற்றுத் தியாகச் செம்மலாகின்றான்." இராவணன் இலங்கைக்குத் திரும்பிவிடுகின்றான்.

இலக்குவன் இறந்தபின் தான் இருப்பதால் பயன் இல்லை என்று வீடணன் இறக்க முயலச் சாம்பவான் அவனைத் தடுக்கின்றான். அநுமன் இருக்கையில் ஆருயிர்க்கு இரங்குவதறிவோ?. சிறிதும் அல்லலுற்று அழுங்கன்மின்" என்று சாம்பவான் தேற்றி அநுமனை மருந்து கொணருமாறு பணிக்கின்றான்." முன்னொரு முறை அரிதில் தேடிக் கண்டுபிடித்து மருத்துமலையைக் கொணர்ந்து வந்துள்ள அநுமன் இப்போது எளிதிற் கொணர்கின்றான்." " தந்தனன் மருந்து தன்னைத்

தாக்குதல் முன்னே யோகம், வந்தது மாண்டார்க்கு எல்லாம்

உயிர்தரும் வலத்தது என்றால், நொந்தவர் நொய்வு தீர்க்கச்

சிறிதன்றோ நொடித்தல் முன்னே இந்திரன் உலகம் ஆர்க்க

எழுந்தனன் இளைய வீரன்'

(யோகம் - நினைவு நொய்வு நோய்; நொடித்தல் - கண நேரம், ஆர்க்க - ஆரவாரிக்க)

22. யுத்த. வேலேற்ற படலம் - 27, 28, 29 23. யுத்த. வேலேற்ற படலம் - 30, 31, 32 24. யுத்த வேலேற்ற படலம் - 39 25. யுத்த. வேலேற்ற படலம் - 40 26. யுத்த வேலேற்ற படலம் - 41 27. யுத்த. வேலேற்ற படலம் - 42