பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிக்கு நாயகன் 21

இளைய பெருமாள் பிழைத்துக்கொள்ளுகின்றான். இந்த இருமுறைகளிலும் அநுமன் தலையீடு இராவிடில் இராமகாதையின் போக்கு எப்படிப் போயிருக்கும் என்பதை நாம் உய்த்து உணரலாம் அல்லவா?

(5) இவை மட்டுமா? பதினான்கு ஆண்டுகள் நிறைவுற்று இராமன் அயோத்திக்குத் திரும்புகையில், இராமன் பரத்துவாச முனிவரின் விருந்தினனாக - சாப்பாட்டு இராமனாகத் - தங்கினபோது அநுமன் மூலம் தான் திரும்பிய செய்தியைப் பரதனுக்கு அனுப்புகின்றான். நெருப்பில் விழும் நிலையிலிருந்த பரதனிடம் இராமன் வருகையைத் தெரிவித்தமையைக் கவிஞன், " ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்

மெய்யின் மெய்யனை நின்னுயிர் வீட்டினால் உய்யு மேயவன் என்றுரைத்து உட்புகாக் கையி னால்ளி யைக்கரி ஆக்கினான்."" என்று நயம்பட உரைப்பான். அதுமன், இராமன் கட்டளைப்படி இச்செய்தியைக் கூறி இராவிடில் இராம காதை துன்ப முடிவாக மாறியிருக்கும்.

இவற்றையெல்லாம் கருதியே கம்பநாடன் செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்று அதுமனைக் குறித்தனன் என்று கருதலாமல்லவா? அதனால்தான் பிறிதோர் இடத்திலும் கவிஞன்,

" மானியாம் வேடம் தாங்கி

மலர்அயற்கு அறிவு மாண்டோர் ஆணியாய் உலகுக்கு எல்லாம்

அறம்பொருள் நிரப்பும் அண்ணல்.”*

என்று கூறினனோ என்றுகூட நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

28. யுத்த - மீட்சி. 240 29. சுந்தர. கடல்தாவு - 26