பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. சொல்லின் செல்வன்

" வேட்பத்தாம் சொல்லிப்

பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார்

கோள்” (646)

தாம் சொல்லும்போது பிறர் விரும்புமாறு சொல்ல வேண்டும். பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். இங்ங்னம் வள்ளுவர் பெருமான் சொல்லின் சிறப்பைப் பேசுவர். இதற்கு எல்லா வகையிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவன் "தன் பெருங்குணத்தால் தன்னைத் தானலாது ஒப்பிலாதான்” என்று கம்பனால் போற்றப்பெறும் அநுமன். இவனே சொல்லின் செல்வன் ஆகின்றான். சொல்லின் செல்வன் என்றால் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத அழகுக்காகவும், அணி நயத்திற்காகவும், கேட்போர் கைதட்டலுக்காகவும் சொற்களை அடுக்கிச் சொல்லடுக்குகளாகப் பேசி உதிர்க்கும் சொல் திறமை உடையவன் என்று பொருள் அன்று. நயமாக, விநயமாக, நாநயம்படப் பேசப்பெறும் சொற்கள் கலந்த பேச்சே அது. அத்தகைய பேச்சை இயல்பாக உடையவன், அதுமன். முதல் சந்திப்பிலேயே அவன் பேச்சில் மயங்கிய இராமன் இவனை - இவன் திறமையை - அறுதியிட்டு இலக்குவனிடம்,

"மாணியாம் படிவம் அன்று

மற்று.இவன் வடிவம் மைந்த! ஆணிஇவ் வுலகுக்கு எல்லாம்

என்னலாம் ஆற்றற்கு ஏற்ற 1. குறள் - சொல்வன்மை - 6 2. கிட்கிந்தை - அதுமப் - 11