பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 23

சேணுயர் பெருமை தன்னைச்

சிக்கறத் தெளிந்தேன்" (மாணி - பிரம்மச்சாரி, ஆணி - அச்சாணி, சேண்உயர் பெருமை - அதிகமான மகிமை சிக்கு அற - ஐயம் இன்றி) என்று சொல்லுவதைக் காணலாம்................... உருவத்தைக் கண்டு ஒருவரை எடை போடக்கூடாது என்று வள்ளுவர் கூறும் உண்மையை,

"உருவுகண்டு எள்ளாமை

வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார்

உடைத்து” (667) என்னும் குறள்மூலம் ஈண்டு எண்ணல் தகும். உருளுகின்ற பெரிய தேரில் அச்சில் நின்று தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகில் உள்ளனர் என்று கூறுவர். அப்பெருந்தகை அதுமனை அவ்வாறு கருதுதல் வேண்டும் என்பது குறிப்பு.

மேலும்,

" இல்லாத உலகத்து எங்கும்

ஈங்குஇவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக்

கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே

யார்கொல்இச் சொல்லின் செல்வன்" என்பான் என்று கூறியவன், சொல்லின் செல்வன் என்ற விருதையும் வழங்கி இவன் நான்முகனோ? உருத்திரனோ? என்று அவர்களோடு ஒப்பிட்டும் பேசுவான். கம்பன் காவியத்தில் அநுமன் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பங்களை யொட்டி இப்பேருண்மையைத் தெளிவாகக் காணலாம்.

(1) சுக்கிரீவனைக் காட்டுமாறு கேட்டபோது, தானும் தன் தம்பியும் கவிக்குலத்திறைவன் சுக்கிரீவனைக்

3. கிட்கிந்தை - அநுமப். - 21 4. குறள் - வினைத்திட்பம் - 7 5. கிட்கிந்தை - அநுமப் - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/24&oldid=1509162" இலிருந்து மீள்விக்கப்பட்டது