பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அண்ணல் அநுமன்


பிலத்தினுட் சென்று என் அண்ணனைத் தேடிப் பார்ப்பேன்; அண்ணன் மரித்துப் போயிருந்தால், அவனைக் கொன்ற மாயாவியைக் கொல்லுவேன், கொல்ல முடியாமல் போனால், போரில் யானும் இறப்பேன் என்று சொல்லிப் பிலத்தினுள் நுழையப் போனான் (55), நாங்கள் வற்புறுத்தியும் கேளாமல் சுக்கிரீவன் செல்வதைக் கண்ட மந்திரிமார் இவனைத் தடுத்துப் பலவாறு சமாதானம் கூறி நாட்டை ஆளுமாறு பட்டயங்கட்டித்தரவே, இவன் அமைச்சர்களின் கட்டளையைக் கடக்க மாட்டாமல் அரசாளுதலுக்கு உடன் பட்டானேயன்றித் தானே கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தால் அரசை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சுக்கிரீவன்மீது சிறிதும் குற்றமில்லை என்பது தெளிவு (56). அந்தக் காலத்தில் வாலியைக் கொன்ற மாயாவி அந்தப் பிலத்திலிருந்து இந்த வழியாக ஏறி வரக்கூடும் என எண்ணி நாங்கள் பல மலைகளைக்கொண்டு அப்பிலத் துவாரத்தை அடைத்துவிட்டோம் (57), நாங்கள் சுக்கிரீவனை அழைத்துக் கொண்டு வந்து கிட்கிந்தை மலையில் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வாலி அந்த மாயாவியைக் கொன்றுவிட்டான் (58).

"பிலத்தில் மறைந்த மாயாவியின் உயிரைக் குடித்த களிப்பினால் வாலி விரைவாகப் பிலத்தின் வாயிலில் வந்து, வழி தடைபட்டிருப்பதைக் கண்டு, தம்பியை அழைத்து, அவனிடமிருந்து எந்த மறுமொழியையும் பெறாதவனாய், வாயிலில் இருந்து தம்பியார் காவல் செய்த விதம் நன்றாயிருந்தது என்று எண்ணி (59); வாலை வலிமையாகத் துக்கிக் காலைப் பலமாக எடுத்துப் பெருங்காற்று எழுந்தாற் போல் அடைப்பை வேகமாக உதைத்துத் தள்ளின மாத்திரத்தில் அடைத்து வைத்திருந்த மலைகள் யாவும் விண்ணிலும், சில கடலிலும் சென்றுஅடைந்தன (60). பின்னர் மிக்க சீற்றத்துடன் இம்மலையை எய்தினன்; மனத்தில் வேறுபாடில்லாத சுக்கிரீவன் தமையன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் (6). நிகழ்ந்தவற்றை நிகழ்ந்தவாறு நவின்று (62), தன்னையும் அறியாது நேர்ந்த தன் குற்றத்தைப் பொறுத்தருளுமாறு வேண்டினான் (63)…………

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/31&oldid=1509638" இலிருந்து மீள்விக்கப்பட்டது