பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 அண்ணல் அதுமன்

அமைச்சர்களுடன் சுக்கிரீவன் தனியே இருக்கும்போது

அநுமன் இராமனுக்கு வாலியைக் கொல்லும் ஆற்றல் உண்டு

என்பதாகக் கூறுவான். (ஆறு கவிகளில்)"

'வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமலக்குமணர்

களிடம் இல்லை என்று ஐயுற்றனை யான் சொல்லுபவற்றை உன்னிப்பாகக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிப்பாய் (78).

இராமனுடைய திருக்கைகளிலும் தாளிலும் திருஆழி திருச்சங்குக் குறிகள் உள்ளன. இவை பிறர்பால் இல்லை. ஆகவே, இராமன் அறம் நிலை நிறுத்தற்பொருட்டுத் திருவவதரித்த திருமாலேயாவன் (79); இதனை ஊகித்து உணரலாம்.

பிராட்டியின் திருமணத்தில் கன்யா சுல்கமாக வைக்கப்பெற்றிருந்த சிவதனுசை முரிக்கும் அற்புத ஆற்றல் அந்தத் திருமாலுக்கேயன்றிப் பிறரிடம் இருக்க முடியுமா? இதனாலும் அவன் திருமாலே என்பதை அறியலாம் (80).

என்னை ஈன்ற வாயுதேவன் ஒருசமயம் என்னிடம், "குழந்தாய், நீ திருமாலுக்கு அடிமை செய்; அது சிறந்த தவமாகும். அஃது உனக்கு மாத்திரமேயன்றி உன்னைப் பெற்றெடுத்த எனக்கும் சிறந்த பதவி நல்கும் என்றான். இந்தச் சீராமனே அத்திருமால் என்பதை அறிக (81).

அக்காலத்தில் 'அப்புருடோத்தமனை அறிதற்கு உறுதியான உபாயம் என்ன? என்று தந்தையைக் கேட்க, அதற்கு அவர், யாவர்க்கும் துன்பம் தோன்றும்போது உடனே தோன்றுவன். அப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில் உனக்கு உள்ளன்பு உண்டாகும் என்று கூறினன். இப்போது இராமனைக் கண்ட மாத்திரத்தில் எலும்பு உருக்காணாதபடி உருகிவிட்டது. இதனால் வேறு வகையாகச் சான்று தேடத் தேவையில்லை (82).

‘சிறந்தவனே, சீராமனின் பெருவலியை அறிய விரும்புவாயானால், அதற்கும் ஓர் உபாயம் உண்டு. நாம் அவனை ஏகும் வழியில் இருக்கும் மராமரங்கள் ஏழினையும்

13. கிட்கிந்தை - நட்புக்கோள். 78 - 83