பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொல்லின் செல்வன் 37

அது நம் மாற்றார் உனது சீற்றத்தை மிகுவித்து நம் இரு திறத்தார்க்குமுள்ள நட்பைக் கெடுத்தற்குக் காரணமாகி விடும். ஆதலால், நீ உள்ளே வந்து நீங்கள் அளித்த செல்வத்தினால் சிறப்புப் பெற்றிருக்கும் சுக்கிரீவனைக் கண்டு சீற்றந்தணிவாயாக’ (67)

இங்கு நாம் சிறிய திருவடியின் பக்குவமான சொற்களைக் காணமுடிகின்றது. தக்க முறையில், தக்க சொற்களைக்கொண்டு பணிவான முறையில் தன் கருத்தை இலக்குவன் முன்வைத்ததனால், அவன் சீற்றம் தணியப் பெறுகின்றான்.

(8) பிராட்டியைக் கண்டு திரும்பிய அநுமன் இராமனிடம் செய்தியைக் கூறும்போது : இராமனை அடைந்த அநுமன் "ஏந்தல்தன் மொய்கழல் தொழுதிலன்" பின் என்ன செய்தான்?

"முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன் கையினன் வையகம் தழிஇ நெடிது இறைஞ்சி வைகினான்" இங்ங்னம் பிராட்டி இருக்கும் திசையை நோக்கித் தண்டன் இட்டது, பேசாத பேச்சாக - இலங்கையில் பிராட்டி குற்றமற்ற நிலையில் இருப்பதைத் தெரிவித்தற்காக ஈண்டு பேசாத பேச்சிலும் சொல்லின் செல்வனைக் காணமுடிகின்றது; கண்டு களிக்கவும் முடிகின்றது.

முதலில் பேச்சைத் தொடங்கும்போதே,

" கண்டெனன் கற்பினுக்கு

அணியைக் கண்களால் தெண்திரை அலைகடல்

இலங்கைத் தென்னகர் அண்டர்நா யகஇனித்

தவிர்தியால் ஐயமும்."" இரத்தினச் சுருக்கமாகப் பொருள் பொதிந்த சொற்களால் அற்புதமாகத் தொடங்குகின்றான். பயனிலையால் தொடங்கி எழுவாயால் முடிக்கின்றான்.

21. சுந்தர - திருவடி தொழுத - 55 22. சுந்தர. - திருவடி தொழுத - 58