பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 39

என்குலம் - வானரர் குலம்; எனக்குத் தந்தாள் - அக்குலத்துப் பிராணிகளை எல்லாம் அநுமன் என்று வழங்குமாறு செய்தாள்; குரங்கு என்ற பெயரை நீக்கி அநுமன் என்று வழங்குமாறு செய்தாள் என்பது குறிப்பு எம் ஒய் - என் தாய்)

“விற்பெரும் தடந்தோள் வீர !

வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய

நங்கையைக் கண்டேன் அல்லேன், இற்பிறப்பு என்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்" (62) (வெற்பு - திரிகடமலை, வீங்குநீர் - மிக்கநீர்; நங்கை - பிராட்டி இல்பிறப்பு என்பது ஒன்று உயர்குடியிற் பிறத்தல் என்பது ஒரு குணம் பொறை - பொறுமை, கற்பு - பதிவிரதாந் தன்மை (ஒருங்கு கூடி) களிநடம் - களிப்போடு கூத்தாடுதல்)

"கண்ணினும் உளைநீ தையல்

கருத்தினும் உளைநீ வாயின் எண்ணினும் உளைநீ கொங்கை

இணைக்குவை தன்னின் ஒவாது அண்ணல்வெம் காமன் எய்த

அலர்அம்பு தொளைத்த ஆறாப் புண்ணினும் உளைநீ நின்னைப்

பிரிந்தமை பொருந்திற்று ஆமோ " (63) (உளை இருக்கின்றாய், தையல் - பிராட்டி: கருத்து - மனம்; குவை முகடு, ஒவாது - இடை விடாமல்; காமன் - மன்மதன், அலர் அம்பு - மலர் அம்பு தொளைத்த - தைத்து ஊடுருவின; பிரிந்தமை - பிரிந்தனள் என்பது; பொருந்திற்று - பொருந்திய சொல்)

"வேலையுள் இலங்கை என்னும்

விரிநகர் ஒருசார் விண்தோய் காலையும் மாலை தானும்

இல்லதோர் கனகக் கற்பச்…………

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/40&oldid=1509389" இலிருந்து மீள்விக்கப்பட்டது