பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 அண்ணல் அநுமன்

சோலைஅங்கு அதனுள் உம்பி

புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய

தவம்செய்த தவமாம் தையல்" (64) (வேலை - கடல் விரிநகர் - பெரிய பட்டணம் ஒருசார் - ஒருபுறத்தில், விண்தோய் - ஆகாயத்தை அளாவிய கனகம் - பொன்; கற்பம் - கற்ப மரம் உள்ள உம்பி - உன் தம்பி; புல் - தருப்பை தொடுத்த - அமைத்த சாலை - குடிசை தவம் செய்த - தவம்தான் செய்த தவமாம் - தவத்தின் வடிவினள், தையல் - பிராட்டி)

"சோகத்தாள் ஆய நங்கை

கற்பினால் தொழுதற்கு ஒத்த மாகத்தார் தேவி மாரும்

வான்சிறப்பு உற்றார் மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன்

மகுடத்தாள் பதுமத் தாளும் ஆகத்தாள் அல்லள் மாயன்

ஆயிரம் மோலி ஆனாள்" (67) (சோகம் - துக்கம்; நங்கை - பிராட்டி தொழுதற்கு ஒத்த வணங்குதற்கு ஏற்ற மாகத்தார் - வானத்தில் வசிப்பவர்; தேவிமார்கள் - இந்திராணி, சரசுவதி முதலியோர், வான்சிறப்பு - மிக்க பெருமை: பாகத்தாள் - பாகத்தில் இருப்பவள்; மகுடத்தாள் - தலைமேல் இருப்பவள்; பதுமத்தாள் - திருமகள் ஆகம் - திருமார்பு ஆயிரம் மோலி - ஆயிரம் திருமுடி)

தான் கொடுத்த கணையாழியைப் பிராட்டி என்ன செய்தாள் என்பதைக் கூறும் போக்கில்,

"ஒருகணத்து இரண்டு கண்டேன் ஒளிமணி ஆழி ஆன்ற திருமுலைத் தடத்து வைத்தாள்

வைத்தலும் செல்வ நின்பால் விரகம்என் பதனின் வந்த

வெங்கொழுந் தீயி னால்வெந்து உருகியது உடனே ஆறி

வலித்தது குளிர்ப்புள் ஊற

z; 24

24. கத்தர - திருவடி தொழுத. 77…………..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/41&oldid=1509390" இலிருந்து மீள்விக்கப்பட்டது