பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அண்ணல் அநுமன்

- ஒத்தால் அல்லாமல் ஒன்றொடு பொதுப்படா - வேறு ஒரு பொருளோடு பொதுத் தன்மை பொருத்தப்படாத (ஒப்பற்ற) உயர்புயத்தினான் - அநுமன்)

பாடலை மீட்டும் மீட்டும் படித்துப் பொருள் தோன்ற அநுபவிக்க வேண்டும்.

பின்னும் பேசுகின்றான் : "எங்கு நின்றனன் இலக்கு வப்பெயர்அவ்

ஏழை எம்பிஅதி காயனாம் சிங்கம் வந்துஅவனை வென்று தன்.உயிர்

எனக்கு வந்ததொர் சிறப்பினான் அங்கு அவன்தனை மலைந்து கொன்றுமுனிவு

ஆற வந்தனன் அதுஅன்றியும் உங்கள் தன்மையின் அடங்கு மோஉலகு

ஒடுக்கும் வெம்கணை தொடுப்பினே (ஏழை - அறிவுக்கேடன் மலைந்து - பொருது; முனிவு கோபம்; ஆற - தணிய ஒடுக்கும் - ஒடுங்கச் செய்யவல்ல)

இங்கும் பாடலைப் பன்முறை படித்து அநுபவித்து அநுமனின் சொல் வளத்தைக் கண்டு மகிழலாம்.

sy of

மேலும் பேசுகின்றான் : "ஆரும் என்படைஞர் எய்தல் இன்றுஅயல்

ஏக யானும்இகல் வில்லும்ஒர் தேரின் நின்றுஉமை அடங்க லுந்திரள்

சிரந்து னிப்பென்இது திண்ணமால் வாரும் உங்களுடன் வானு ளோர்களையும்

மண்ணு ளோரையும் வரச்சொலும் போரும் இன்றுஒரு பகற்க னேபொருது

வெல்வென் வென்றுஅலது போகிலேன்'

(ஆரும் - எவரும் படைஞர் - சேனை வீரர்; அயல்ஏக - அப்புறம் சென்றுவிட, இகல் - வலிமையுள்ள உமை அடங்கலும் திரள் - உங்கள் எல்லோரையும் கூட்டமாக, சிரம் - தலை, திண்ணம் - உறுதி; வாரும் - வாருங்கள்)

31. யுத்த - நாகபாசம் - 76 32. யுத்த. - நாகபாசம் - 77