பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் செம்மல் 53

கற்பு நீங்கிய கணங்குழை

இவள்எனில் காகுத்தன் புகழொடும் பொற்பும் யானும்இவ் இலங்கையும்

அரக்கரும் பொன்றுதும் இன்றென்றான்."" (எற்பு - எலும்பு யாக்கை - உடம்பு, இகந்தனென் - அடையாதொழிந்துவிட்டேன்; வான்தளை - பெரிய பாசபந்தம்; இகந்து - பொன்றாது விட்டு; நீங்கிய - ஒழிந்த கணங்குழை - பிராட்டி; பொற்பு - பொலிவு: பொன்றுதும்- அழிவோம் என்றான் - என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.)

"இதனைத் தெளிவாக்க முயல்வேன். இவ்வுலகிற் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் எம் பெருமானுக்குப் பணிவிடையை இனிது செய்து நிறைவேற்றி அவனது திருவுளத்திற்கு உகப்பை விளைவித்து அவனருகுக்குத் தாம் இலக்காவதேயாகும். அங்ங்னம் திருமாலாகிய இராமபிரானுக்குச் சீதாப்பிராட்டியைத் தேடிக் கொடுத்தலாகிய தெய்வப்பணியை நிறைவுபெறச் செய்து எனது பிறவியைப் பயனுள்ளதாக்கிக்கொள்ளத் தலைப்பட்ட யான் மேற்கொண்ட தொண்டு இனிது நிறைவேறாமைபற்றி எனது பிறப்பு வீணேயாயிற்று என்று கருதுகின்றான்.

அது கிடக்கட்டும் என்று கூறித் தன் ஆருயிர் நாயகனான இராமபிரானிடத்துப் பிராட்டி வைத்திருந்த அன்பு மனப்பூர்வமான மெய்யன்பாய் இருக்குமாயின், அப் பெருமாட்டியின் கற்புநிலை கலங்கியிராது என்பதுபற்றி "அற்புவான் தலையிகந்து தன் கற்பு நீங்கிய கணங்குழை' என்றும், எக்காரணத்தாலும் எவ்வகை நிலையிலும் ஒரு சிறிதும் ஒழுக்கந்தவறாமை உயர்குடிப் பிறந்தார்க்கு இயல்பாயிருக்க, அதற்கு மாறாகச் சனக குலத்தவளான இவள் கற்பொழுக்கம் இழந்தனள் என்று கொண்டு இப்பிறப்பினொடும் இகந்து தன் கற்பு நீங்கிய கனங்குழை என்றும் கூறினன். தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழு

17. சுந்தர ஊர்தேடு - 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/54&oldid=1360591" இலிருந்து மீள்விக்கப்பட்டது