பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 அண்ணல் அநுமன்

தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள்-55) என்று வள்ளுவர் பெருமான் கூறியிருத்தற்கொப்ப கடவுள் ஆணையால் நிகழக்கூடிய செயல்களையும் தான் நிகழ்த்த வல்ல ஆற்றல் கற்பு நிலைக்கு இருத்தலால் 'தெய்வக் கற்பு'என்றும், கற்பு நலத்தின் சிறப்பைக் கருதி அருங்கற்பு என்றும் கூறினன் என்னும் அது மனது சிந்தனை யோட்டத்தைக் கருதலாம்.

புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (குறள்-59) என்ற பொய்யாமொழிப்படி மனைவி கற்பு நிலை கலங்கினால் கணவனது புகழும் பெருமிதமும் ஒழிதல்பற்றிக் காகுத்தன் புகழொடும் பொற்பும் இன்று பொன்றும் என்றும், பிராட்டியை இங்ங்னம் நிலைகுன்றக் கண்ட பின்பு தான் உயிர் வைத்திருப்பதில் பயன் இல்லை என்பதுபற்றி யான் இன்று பொன்றுவென் என்றும், இங்ங்னம் அவள் கற்பழிவதற்குக் காரணமான இராவணன் அந்தத் தீவினைப் பயனால் பந்துமித்திரருடனும் ஊரோடும் தவறாமல் விரைவில் ஒழிவன் என்பதுபற்றி இவ் இலங்கையும் அரக்கரும் இன்று பொன்றுவர் என்றும் கருதினன், காற்றின் மைந்தன். தான் கண்ணுற்றது இன்றைக்கே யாதலாலும் முன்னமே அவள் நிலை கலங்கியிருப்பின் அக்கொடிய வினையால் அரக்கர்கட்கும் அவர் ஊர்க்கும் அழிவு உண்டாயிருத்தல் கூடுமாதலால், இதுவரை அங்ங்னம் ஆகாமையால் இந்த ஒழுக்கக்கேடு அன்றுதான் நிகழ்ந்திருக்கு மென்றும் கருதி இன்று என்றனன். 'காகுத்தன் அருந்தேவி கற்பழிந்திருப்பின், அங்ங்னம் ஆதற்குக் காரணமான இராவணனை அரக்கருடனும் இலங்கையுடனும் ஒழித்து யானும் என் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று அநுமன் கூறியதாகப் பின் இரண்டடிகட்குக் கருத்து காணலாம். 'இவள் பிராட்டியல்லள் என்று கருதி இராவணனது மாளிகையுள் புகுகின்றான்.

இராவணன் : தான் இனி மண்டோதரி மாளிகையில் இருப்பதால் பயன் இல்லை என்று அவ்விடத்தை விட்டு,