பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் செம்மல் 55

'பெருமேரு குன்று குன்றிய தகைவுற

ஓங்கிய கொற்றமா ளிகைதன்னில் சென்று புக்கனன் இராவணற்கு

எடுப்பருங் கிரியெனத் திரள்தோளான் "

குன்றிய குறுகி உள்ளது என்று சொல்லும்படி:

புக்கனன் - புகுந்தனன்; கிரி - கைலாய மலை; திரள்

தோளான் - திரண்ட தோளையுடையவன் (அநுமன்)

அந்த மாளிகையில் புகுந்தவன், வாமன வடிவத்திலும் சிறிய வடிவம் கொண்டு நிற்கின்றான், அணுவின் மேருவின்

ஆழியான் எனச் செலும் அநுமன். அங்ங்னம் நின்றவன்,

'திண்தலை பத்தும் தோள்கள்

இருபதும் தெரிய நோக்கிக் கண்டனன். " ‘இவன்தான் இராவணன் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுகின்றான்; கோபம் தலைக்கேறுகின்றது. "கண்கள் காலச் செந்தீ விண்டன; கீழும் மேலும் கீண்டு வெடித்தன” - கண்கள் காலாக்கினியை உமிழ்ந்தன; கீழுலகமும் மேலுலகமும் பிளந்து வெடிக்கலாயின.

அநுமன் சிந்திக்கின்றான்; "பிராட்டியை வஞ்சித்துக் கவர்ந்து வந்தவனாகிய இராவணனுடைய மணிமுடிகளை என் கால்களால் உதைத்துத் தள்ளி, பத்துத் தலைகளையும் உடைத்து எனது ஆண்மைத் தன்மையைக் காட்டே னாயின், என் அடிமைத் திறன் நிறைவு பெறாது (219). அடியவன் போலப் பாவனை காட்டிப் பாசாங்கு செய்து திரிவது உண்மையான அடிமைத் திறம் ஆகாது. பிராட்டியைக் கவர்ந்து வந்த கொடிய அரக்கன் நான் பார்த்த பின்னரும் தப்பிப் பிழைக்கக்கடவனோ? அவனது திரண்ட தோள்களைத் தடித்தெறிந்து பத்துத் தலைகளையும் உருண்டோடும்படி செய்து, அவனைக் கொன்று இலங்காபுரியையும் அழித்துவிட்டால்தான் என் அடிமைத்

18. சுந்தர. ஊர்தேடு - 203 19. சுந்தர. ஊர்தேடு - 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/56&oldid=1360594" இலிருந்து மீள்விக்கப்பட்டது