பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிந்தனைச் செம்மல் 57

காண்பேனாயின் என் துன்பம் தீரும் இங்கும் கண்டிலேன் எனின், செய்யத் தக்கது ஒன்றும் இல்லை; இலங்காபுரியைப் பெயர்த்தெடுத்து, இத்திரிகூட மலையிலே வீசி எறிந்து நாசப்படுத்தி யானும் உயிர் விடுவேன்” என்று எண்ணுகின்றான்.

இங்குப் பிராட்டியைக் காண்கின்றான்.

"விரிமழைக் குலங்கிழித்து

ஒளிரும் மின்எனக் கருநிறத்து அரக்கியர்

குழுவிற் கண்டனன்

குருநிறத்து ஒருதனிக்

கொண்டல் ஆம்னனாக்

கருநிறத்து அழகனுக்கு

அமைந்த காந்தையை (மழைக்குலம்-மேகக்கூட்டம் கிழித்து- பிளந்து: மின் - மின்னல், குருநிறம் - சிறந்த நிறம் அமைந்த - ஏற்ற, காந்தை - பிராட்டி)

கண்ட மகிழ்ச்சியினால்,

"ஆடினன் பாடினன்

ஆண்டு மீண்டும் பாய்ந்து ஓடினன் உலாவினன்

உவகைத் தேன்.உண்டான்."

劈数

(உவகை - ஆனந்தம்) சூழ்நிலையால் பிராட்டி கற்பு கெடாத நிலையில் உள்ளாள் என்பதை உணர்ந்து மகிழ்கின்றான்.

மகிழ்ச்சிப் பெருக்கில்,

"மாணநோற்று ஈண்டுஇவள்

இருந்த வாறுஎலாம் காணநோற்று இலன்அவன்

கமலக் கண்களால்"

23. கந்தர. காட்சி - 63 24. சுந்தர. காட்சி - 65 25. சுந்தர. காட்சி - 73