பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 அண்ணல் அநுமன்

(மாண மாட்சிமைப்பட நோற்று - தவம்செய்து: கமலம் - செந்தாமரை) என்று கூறிக் களிக்கின்றான்; காகுத்தன் கமலக் கண்களால் கண்டு மகிழத் தவம் செய்யவில்லையே என்று கவல்கின்றான்.

“தருமமே காத்ததோ?

சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ?

கற்பின் காவலோ? அருமையே! அருமையே!

யார்.இது ஆற்றுவார்? ஒருமையே எம்மனோர்க்கு

உரைக்கற் பாலதோ?" என்று அவளது தூய்மையை எண்ணி எண்ணி - சிந்தித்து சிந்தித்து - வியப்பெய்துகின்றான்.

சிந்தனை - 4 : இச்சிந்தனை பல்வேறு திசையில் செல்லுகின்றது: பிராட்டியைக் கண்டு பேசிய இச்சிறு செயலோடு திரும்புதல் தனது ஆண்மைக்கு இழுக்காகும்: தனது ஆண்மையைப் பகைவர் மதிக்குமாறு பெருங் காரியத்தைச் செய்து போதலே தகுதி என எண்ணு கின்றான். (1)

தலைவனது விருப்பத்தை நிறைவேற்றுதலே அடியவனுக்கு ஏற்ற செயல் இராமபிரான் விஷயத்தில் தீங்கு புரிந்த அரக்கர்களையெல்லாம் அவர்கள் வாழும் இடத்தோடு அழித்துப் பிராட்டியைப் பெருமானிடம் கொண்டு சேர்த்தால்தான் தன் அடிமை நிலை நிற்கும் எனக் கருதுகின்றான். (2)

வஞ்சனையால் கவர்ந்துகொண்டு வந்து சிறைவைத்த பிராட்டியைச் சிறை மீட்டுக் கொடுத்தால் அது மாவீரனான இராமனது பெருமைக்கு இழுக்காகும், அது பிராட்டியாலும் விலக்கப்படும். அது கிடக்கட்டும் என்று கருதுபவன் இராமபிரானது துணைவியைக் கவர்ந்த இராவணனைச்

26. சுந்தர. காட்சி - 75 27. சுந்தர. பொழிலிறுத்த 1-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/59&oldid=1360597" இலிருந்து மீள்விக்கப்பட்டது