பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அண்ணல் அநுமன்

தொடங்குகின்றான். அவன் கருதியபடியே அவன் இந்திரசித்தால் பாசத்தால் கட்டப்பெற்று, இராவணன் முன் நிறுத்தப்பெறுகின்றான் என்பதை நாம் அறிவோம். இங்கு நாம் அதுமனைச் ‘சிந்தனைச் செம்மலாகக் கான முடிகின்றது. எப்போதும் முதல் சிந்தனை சரியாக இராது என்பதையும் அறிகின்றோம்.

சிந்தனை 5 : இந்திரசித்தன் நான்முகன் கணையை ஏவி அதுமனைப் பாசத்தால் பிணித்துக் கம்பீரமாக வீற்றிருக்கும் இராவணன் முன்" கொண்டுவந்து நிறுத்துகின்றான். தொலைவிலிருக்கும் போதே,

"இருந்த எண்திசைக் கிழவனை

மாருதி எதிர்ந்தான்' (எதிர்ந்தான் - கண்டான்) கண்டவுடன் சீற்றம் தலைக்கேறுகின்றது. "கருந்திண் நாகத்தை நோக்கிய

கலுழனின் கனன்றான் திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி உருந்து நஞ்சுபோல் பவன்வயின்

பாய்வென்என்று உடன்றான்” ” (கருந்திண் நாகம் - கரிய வலிய பாம்பு, கலுழன் - கருடன்; வீக்கிய - கட்டியுள்ள சிந்தி - சிதற அடித்து: உருந்து - கோபித்து; உடன்றான் - உக்கிரம் கொண்டான்)

கோபத்தால் செய்யும் சிந்தனை : "இவன் உறங்குகின்ற போது இவனைக் கொல்லுதல் பழியெனக் கருதிக் கொல்லாது விட்டேன். இப்போது சிம்மாதனத்தில் வீற்றிருப்பதைக் காண நேர்ந்தேன். இனிப் பலவகையாக யோசிக்க வேண்டியதில்லை. இப்பொழுதே இவனது

28. சுத்தர - பிணிவீட்டு. 28-54. இராவணன் பெருமிதத்துடன் வீற்றிருப்பதை வருணிக்கும் பாடல்கள். பன்முறை படித்து அதுபவிக்கத் தக்கவை.

29. சுந்தர - பிணிவிட்டு - 55.

30. சுந்தர - பிணிவீட்டு - 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/61&oldid=1360600" இலிருந்து மீள்விக்கப்பட்டது