பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 அண்ணல் அநுமன்

இங்ங்னம் துணிந்த அநுமன் சினந்தணிந்து அத்துணிவு தகுதியன்று எனக் கருதுகின்றான். வேறு விதமாகச் சிந்திக்கின்றான்."காரியம் அன்று என நீதியின் நினைந்தான்: ' மாறாகச் செய்யும் சிந்தனை : சிந்திக்கும் மாருதி, இந்த இராவணன்,

" கொல்லலாம் வலத்தனும்

அல்லன், கொற்றமும் வெல்லலாம் தரத்தனும்

அல்லன்.”* என்று கருதுகின்றான்; இனி, வருங்காலத்தில் இவன் வலிமையைக் காகுத்தன் ஒருவனாலேயே வெல்லுதல் கூடும்: மற்றையோர் எவரும் இவனை வெல்லமுடியாது." மேலும்,

" என்னையும் வெலற்குஅரிது

இவனுக்கு ஈண்டு;இவன் தன்னையும் வெலற்குஅரிது

எனக்கு" " இவனுடன் எதிர்த்துப் போர் புரிந்தால் போரிலேயே பல நாள்கள் கழிந்துவிடும். ஆகவே, நெருங்குதற்கரிய போர்த்தொழிலைத் தொடங்குவது நல்லது அன்று.”

"ஏழு பேருலகங்களும் இன்புறும்படி இராவணனது தோள்களையும் தலைகளையும் துணித்துத் தள்ளுவேன் யான்” என்று ஊழியான் தண்டகாரணிய முனிவர்க்கு அபயமளித்து வாக்குறுதி தந்துள்ளான் அன்றோ? இப்போது யான் இவனை எதிர்த்துக் கொல்லுவேன் ஆயின், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் போகுமன்றோ? ஆதலாலும், யான் இப்பொழுது போர் தொடங்குதல் தகுதியன்று.”

மற்றும், "பொங்கு வெம் செருவிடையே பொழுது போக்கினால், இங்கு ஒரு திங்கள் இருப்பல் யான் என்று

33. சுந்தர. பிணிவீட்டு - 60 34. சுந்தர. பிணிவிட்டு - 61 35. சுந்தர. பிணிவீட்டு - 61 36. சுந்தர. பிணிவீட்டு - 62 37. சுந்தர. பிணிவிட்டு - 62 38. சுந்தர. பிணிவீட்டு - 63