பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழையும் உருவினன் 65

என்னும் பாடற்பகுதியால் இதனை அறிகின்றோம் வணங்கிய அளவில்,

தாழ்தலும் தகாத செய்தது

என்னைநீ தருமம் அன்றால் கேள்விநூல் மறைவ லாள

என்றனன்”* என்பதில் சத்திரியனைப் பார்ப்பனன் வணங்குவது முறை யல்லவே என்று அருளிச்செய்கின்றான். இதனைச் செவியுற்ற மாருதி,

"பாழியந் தடந்தோள் வென்றி

மாருதி பதுமச் செங்கண் ஆழியாய்! அடியேன் தானும்

அரிக்குலத்து ஒருவன் என்றான்'

(அரி - குரங்கு) என்கின்றான். ‘அடியேன் அரிக்குலத்து ஒருவன் என்று விளக்குவான்.

உடனே, தருமத்தின் தனிமை தீர்ப்பான் போன்ற மாருதி பேருருவம் கொண்டு தனது உண்மையான வானர உருவைக் காட்டி நிற்கின்றான், இராமலக்குமணர்கள் அதிசயமடையும்படி. நான்மறைகளாலும் நல்ல சாத்திரங்களாலும் பெரிய உருவத்தைக்கொண்டதென்று சொல்லப்பெறுகின்ற பெரும் பொருள்களும் தனது உருவத்திற்குமுன் சிறுமையுற்றுத் தோன்றும்படியாகவும், பொன்மயமான மகாமேரு பர்வதம் தனது தோள்கட்கு ஒப்பாகமாட்டாதபடியும் பேருருக் கொண்டான் என்பது கவிஞரின் குறிப்பு. இராவணன் முதலிய அரக்கர்களால் நாசம் செய்யப்பெற்று அழிந்துபோன நிலையிலிருந்ததான தருமத்தை அநுமன் இராமனுக்குத் துணையாக இருந்து அவர்களைச் சங்கரித்து நிலை நிறுத்துவதனால் தருமத்தின் தனிமை தீர்ப்பான் என்ற விருதை அப்பெருந்தகைக்கு வழங்கு கின்றான், கவிப்பெருந்தகை,

3. கிட்கிந்தை அதுமப். - 33 (முற்பகுதி) 4. கிட்கிந்தை அதுமப். - 33 (பிற்பகுதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/66&oldid=1360608" இலிருந்து மீள்விக்கப்பட்டது