பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விழையும் உருவினன் 67

அவர்கள்மீது அன்பு பாராட்டி அவர்களை உபசரிக் கின்றாள். அவள் இருந்த பிலம் நூறு யோசனை பரந்த வடிவுள்ளது. அவள் தனக்கு மேலுலகம் எய்தும் வழியைக் கூறுமாறு வேண்ட, அதுமன் அதற்கு வாக்குறுதி தருகின்றான். மற்றைய வானர வீரர்களும் அந்த இருட் குகையினின்று வெளியேற வழி காண வேண்டுகின்றனர். அவன் புன்சிரிப்புடன் அஞ்சற்க என்று கூறி,

"மடங்கலின் எழுந்துமழை

ஏறரிய வானத்து ஒடுங்கலில் பிலந்தலை

திறந்துஉல கொடுஒன்ற நெடுங்கை கள்பெயர்த்து

நெடுவா னுறநிமிர்ந்தான். ஆண் சிங்கம் போன்ற அநுமன் மற்றையோர்க்கு அபயமளித்து அலட்சியமாகச் சிரித்துக்கொண்டே பிலம் முதல் ஆகாயம் வரையில் ஒரே வழியாகத் திறக்குமாறு தனது கைகளைத் துக்கிக்கொண்டு பேருருவம் கொண்டு நிமிர்ந்தனன். இது மூன்றாவது பேருருவம். இதனைக் கவிஞன், பாதலத்தில் அழுந்திக் கிடந்த பூமியைத் தனது கோரத் தந்தத்தினால் குத்தி எடுத்துக்கொண்டு வெளிவந்த திருமாலின் ஆதிவராகத்தைப் போன்றனன் என்பன்." இன்னும் திரிவிக்கிரமனின் அழகிய ஒப்புற்ற சிவந்த திருவடியையும் ஒத்தனன் என்றும் சிறப்பிப்பன்."

மயன் அதனைத் தன் காதலி ஹேமை (ஏ.மை) என்பவளுக்கு அளித்தான். அவ்விருவரும் சிற்றின்பத்தில் மூழ்கியிருந்தனர். சுயம் பிரபை (ஏமையின் தோழி - உயிர்த்தோழி) அவளுடன் இருந்தாள். ஏமையைத் தேடிவந்த இந்திரன் நிலையை அறிந்து, சீற்றம் கொண்டு மயனைக் கொன்றுவிடுகின்றான். நடந்த செயலை அறிந்த இந்திரன் அதற்குச் சுயம்பிரபைதான் முதற்காரணம் என்பதை அறிந்து, தெளிந்து, ஒருவரும் இல்லாத இந்நகரத்தைப் பாதுகாத்துக்கொண்டு தனியே இருக்குமாறு சாபம் இடுகின்றான்: இராமது தர்கள் வருங்காலத்தில் சாபம் நீங்கும் என்று சாப விமோசனமும் தருகின்றான்.

8. கிட்கிந்தை - பிலம்புக்கு - 68.

9. கிட்கிந்தை - பிலம்புக்கு - 69.

10. கிட்கிந்தை - பிலம்புக்கு - 70. அதுமனுக்குத் திருவடி என்றே ஒரு பெயர் இருத்தலால் வேறு வகையாகக் காரணப் பொருள்