பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விழையும் உருவினன் 71

விசும்பையும் கடக்க வீங்கினான்." இந்த வடிவத்துடன் ஒர் இரும்புத் தூணை கையில் ஏந்திக்கொண்டு போரிடுகின்றான், அநுமன். இறுதியில் அனைவரும் அழிந்துபடுகின்றனர். இதனைக் கவிஞன்,

"வெஞ்சின அரக்கர் ஐவர்

ஒருவனே வெல்லப் பட்டார் அஞ்செனும் புலன்கள் ஒத்தார்

அவனும்நல் அறிவை யொத்தான்."" என்று ஒர் அற்புத உவமையால் விளக்குவான். ஐம்பொறிகள் பஞ்ச சேனாபதிகட்கும், தத்துவ உணர்வு அநுமனுக்கும் உவமைகளாக நின்று கருத்தைப் படிப்போர் நெஞ்சில் ஆணித்தரமாகப் பதியவைக்கின்றன. ஈண்டு கொண்டது ஏழாவது பேருருவம்.

(8) பஞ்ச சேனாபதிகட்கு அடுத்து வந்த அட்சய குமரனை அரைத்துத் தேய்த்த பிறகு" இந்திரசித்தன் வருகின்றான். “எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழன்றோ தேய்ந்தது' என்று பொருமிக்கொள்ளுகின்றான், இராவணனிடம்

"ஆயினும் ஐய நொய்தின்

ஆண்டொழிற் குரங்கை யானே ஏயெனும் அளவிற் பற்றித்

தருகுவென் இடர்என்று ஒன்றும் நீஇனி யுழக்கற் பாலை

அல்லைநீடு இருத்தி" (ஏஎனும் அளவில் - சுருங்கிய காலத்தில்; நொய்தின் - எளிதில், உழக்கற்பாலை அல்லை - வருந்தத் தக்கவன் அல்லை) என்று சொல்லிப் போர்க்களத்திற்கு வருகின்றான். அநுமன் மீது அம்புகளைப் பொழிகின்றான். நெடுஞ்சினங் கொண்ட அநுமன் பேருருவம் கொள்ளுகின்றான்.

17. சுந்தர. பஞ்சசேனாபதிகள் வதை - 29 18. சுந்தர. பஞ்சசேனாபதிகள் வதை - 64 19. அட்சயகுமரன் வதை - 38 20. பாசப்படலம் - 5

2#. சுந்தர. பாசப். 12