பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 அண்ணல் அநுமன்

ஒத்தன; தோளோடு தோளுக்கு உள்ள அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்லமுடியாது. வைத்துள்ள அடியோடு பெயர்த்து வேறோர் அடிவைக்க இலங்கையில் இடம் இல்லாமல் போயிற்று. பெரிய கையை வீசுவதற்கு நீளமாக ஒடுகின்ற திசையே போதாது. மருந்து கொணர விரைந்து எழுபவனான மாருதியின் உருவ நிலை இதுவாகும்"

அநுமன் விரைந்து எழுந்த நிலையை, "வால்வளைத்துக் கைந்நிமிர்த்து வாயினையும்

சிறிதகல மடித்து மாளக் கால்நிலத்தின் இடையூன்றி உரம்விரித்துக் கழுத்தினையும் சுருக்கிக் காட்டித் தோள்மயிர்க்குந் தளஞ்சிலிர்ப்ப விசைத்தெழுந்தான்

அவ்விலங்கை துளங்கிச் சூழ்ந்த வேலையிற்புக்கு அழுந்தியதோர் மரக்கலம்போல்

திரிந்துஅயர விசயத் தோளான்”* (உரம் - மார்பு விசைத்து - வேகமாக, துளங்கி - நிலை கலங்கி, வேலை - கடல்) என்ற பாடலில் காட்டுவான். பாடலை மீட்டும் மீட்டும் பன்முறைப் படித்து அநுபவித்து அந்த உருவத்தை மனத்தில் நிலைநிறுத்த முயல்வோம்." இங்கு எடுத்தது பத்தாவது பேருருவம்.

(11) நிகும்பலை யாகம் கலைந்த பிறகு போர் நடைபெறுகின்றது. இலக்குவனும் இந்திரசித்தும் மோதுகின்றனர். இந்திரசித்து தேர்மேல் இருந்துகொண்டு போர்செய்ய இலக்குவன் தரையில் நின்றுகொண்டு போர் செய்யும் நிலை. இதனைப் பார்த்துப் பொறுக்காத மாருதி இலக்குவனைத் தன் தோளின்மீது ஏறிப் போர் செய்யுமாறு வேண்ட அவனும் இசைந்து அவ்வாறே செய்கின்றான்.

"சிந்தாகுலம் களைந்தான்என

நெடுஞ்சாரிகை திரிந்தான்.""

28. யுத்த மருத்துமலை . 32

29. யுத்த மருத்துமலை - 32

30. கடல் தாவு படலத்தில் அவன் கொண்ட உருவத்துடனும் வேகத்துடனும் ஒப்பிட்டு மகிழலாம்.

31. யுத்த நிகும்பலையாகம் - 102