பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 அண்ணல் அநுமன்

என்பது சூளுரை. இதில் அண்ணா, நீபதினான்கு ஆண்டுகள் கழிந்ததும், ஒருநாள்கடத் தாமதிக்கலாகாது. அங்கனம் வாராமல் ஒருநாள் தாமதித்தாலும் எரிதழலின் மூழ்கி என் உயிரை மாய்ப்பேன். உன்மேல் ஆணை” என்று சூளுரைக் கின்றான். இராம காதையைக் கற்போர் அனைவரும் இதனை நன்கு அறிவர்.

இராமன் இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்தானா? இல்லை என்பதே மக்கள் தீர்ப்பு இராமன் முதலியோர் புட்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்புகின்றனர். அதனை அறிந்த பரத்துவாசமுனிவர் இருடிகள் சூழ இராமனை எதிர்கொள்ளச் செல்லுகின்றனர். அதனைக் கண்ணுற்ற இராமன் புட்பக விமானத்தை இறங்கச் செய்கின்றான். இராமன் விரைவாக முனிவன் முன் சென்று வணங்க, இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு மகிழ்கின்றனர்.

பரத்துவாசர் இன்று எம் விருந்தாளியாக இருக்க என்று இராமனை வேண்ட, அவனும் அவ்வாறே ஒருப்படுகின்றான்."பரதன் உயிர் பெரிதா, முனிவர் அளிக்கும் விருந்து பெரிதா?” என்பதை ஒராது விருந்திற்கு இணங்குகின்றான். இது பெருங்குற்றம் கணையாழியுடன் அநுமனைச் செய்தி கூறி அனுப்பியது சரிதான் என்றாலும் விருந்திற்குத் தங்கியது சரியன்று. அதனால்தான் இராமன் 'சாப்பாட்டு இராமன் ஆகின்றான். இது மக்கள் தீர்ப்பு. எத்தொழிலும் செய்யாது உண்டு ஊர் சுற்றுபவனுக்குச் சாப்பாட்டு இராமன் என்று வழங்கப்பெறும் சாட்டுப் பெயர். நடையில் நின்றுயர் நாயகனுக்கு வழங்கப்பெறுகின்றது, பொதுமக்களால்

இராமனுக்குப் பரதன் நினைவும் வருகின்றது. இதனைக் கவிஞன்,

"இன்று நாம்பதி வருதுமுன் மாருதி ஈண்டச் சென்று தீதின்மை செப்பியத் தீயவித்து இளையோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/77&oldid=1360626" இலிருந்து மீள்விக்கப்பட்டது