பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விழையும் உருவினன் 77

நின்ற நீர்மையும் நினைவுநீ

தேர்ந்தெம்மி னேர்நல் நன்றெ னாவவன் மோதிரம்

கைக்கொடு நடந்தான்."" என்று காட்டுவான். “அதுமனே, நாம் அயோத்திக்கு ஏகுவதற்கு முன்பே, இப்போது விரைவாகச் செல்க. நந்தியம் பதியிலுள்ள எம்பி பரதனுக்கு எம் நலத்தைக் கூறுக, அவனது ஒழுக்கத்தையும் எண்ணத்தையும் ஆராய்ந்து அறிந்து எம்மிடம் வந்து சேர்க" என்று கூறி அடையாளமாகத் தன் மோதிரத்தைக் கொடுக்க, அதனைப் பெற்றுக்கொண்டு செல்கின்றான் அநுமன், அந்தண வடிவத்துடன்.

குறிப்பிட்ட நாளில் இராமன் திரும்பாததால் சத்துருக்கனால் தீ மூட்டப்பெறுகின்றது. கோசலை, பரதனைத் தீயில் விழாது தடுத்துக்கொண்டிருக்கின்றாள். இந்நிலையில் அநுமன் வருகின்றான். "ஐயன் வந்தனன், ஆரியன் வந்தனன்" என்று கூறிக்கொண்டு வருபவன் "கையி னால்எரி யைக்கரி யாக்கினான்' அடையாளமாக இராமனுடைய கணையாழியையும் தருகின்றான். மகிழ்ச்சி யால் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பரதன் அதுமனைக் கொண்டாடி “நீ யார்?" என்று அவனை வினவ, அவனும் தன் வரலாறு கூறுகின்றான்.

"காற்றினுக்கு அரசன்பால் கவிக்கு லத்தினுள்

நோற்றனள் உயிற்றின்வந்து உதித்து நும்முனாற்கு ஏற்றிலா வடித்தொழில் ஏவ லாளனேன் மாற்றினென் உருவொரு குரங்கு மன்னயான்' " என்று கூறியவன்,

"அடித்தொழில் நாயினேன் அற்ப யாக்கையைக்

கடித்தடத் தாமரைக் கண்ணின் நோக்கெனா பிடித்தபொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்

«جش

முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான்

34. யுத்த. மீட்சி. 202 35. யுத்த. மீட்சி. 240 36. யுத்த. மீட்சி. 256 37. யுத்த. மீட்சி. 257