பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 அண்ணல் அநுமன்

என்ற கவிதையில் கூறியுள்ளவாறு பேருருவம் கொள்ளலானான். மானிட உருவத்தை நீக்கித் தனது முடித்தலம் வானத்திலுள்ளவர்களின் கண்களில் எதிர்ப்பட வளர்பவனானான். அதனைக் கண்டவர் அதிசயமும் அச்சமும் கொள்ளலாயினர். பின்னர், பரதனது வேண்டுகோட்கிணங்கப் பெருவடிவத்தைச் சுருக்கிக் கொள்ளுகின்றான். இஃது அநுமன் கொண்ட பன்னிரண்டாவது பேருருவம்.

இங்ங்னம் இராம காதையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, பன்னிரண்டு ஆழ்வார்களின் எண்ணிக்கை போல், துவாதச திருமண் காப்பு எண்ணிக்கை போல் பன்னிரு முறை பேருருவங்கள் கொண்டு அநுமன் இராம கைங்கரியத்தில் ஈடுபட்டுத் திறமையாகச் செயலாற்றுவதைக் காண்கின்றோம். இவனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் திறமையைக் கம்பநாடன்,

"அணுவின் மேருவின் ஆழியான்

எனச்செலும் அநுமன்” ”

என்றும், புகைபுகா வாயிலும் புகுவான்' என்றும் பாராட்டி மகிழ்வான். அவன் வடிவம் எடுக்கும் பெருமையைப் படிக்கும் நாமும் கவிஞனின் பாராட்டில் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றோம்.

38. சுந்தர. ஊர்தேடு - 134 39. சுந்தர. ஊர்தேடு - 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/79&oldid=1360629" இலிருந்து மீள்விக்கப்பட்டது