பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7

அவன் ஆற்றலைப் பாடும் கம்பன், இராமன் கூற்றாகப் பேரறிவாளன்' என்று புகழ் பாடிடுவான். வீடணனை ஏற்றுக் கொள்ளலாமா என்று தன் துணைவரையெல்லாம் கேட்ட இராமன் அநுமனிடம் கேட்பதை இதோ, கம்பன் வாயிலாய்க் காண்போம் :

"உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்

செறிபெருங் கேள்வியாய்! கருத்து என்? செப்புஎன, நெறிதரு மாருதி என்னும் நேர்இலா அறிவனை நோக்கினான், அறிவின் மேல்உளான்."

(யு.கா.6448) நெறிதரு மாருதியாம், நல்வழி காட்டும் அதுமனைச் செறிபெருங் கேள்வியாய் ! என இராமன் விளிக்கிறான். இறுதி அடியில் உள்ளது முத்தாய்ப்பு : “அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான்'; அதுவும் நேர் இலா அறிவன்; அதுமனுக்கு நிகர் அவனேயாம். அப்படிப்பட்ட அறிவனை நோக்கியவன் யார்? அறிவின் மேல்உளான் ஆகிய இராமன். அறிவின்மேல் உளனாகியவனே கருத்துக் கேட்கும் அளவுக்கு, செறிபெருங் கேள்வியன் என்னுமளவுக்கு, நேர் இலா அறிவன் அநுமன் ஆவான் என்றால், பேரறிவாளன் அநுமன் என்பதில் ஐயமுண்டோ? பேராசிரியர் ரெட்டியாரவர்கள் அப்படி மாருதி நுணங்கிய கேள்வியனாய் வடித்துச் சொல்லும் 18 காரணங்களை மிக அழகாகத் தொகுத்துச் சொல்கிறார்கள், குணக்குன்றன் என்ற கடைசிப்பகுதியில் சமயோசித புத்தி என்ற தலைப்பில்.

'கவிக்கு நாயகன் என்ற தலைப்புடைய முதல் இயலில் 'இராகவன் புகழினைத் திருத்தும் என்ற தொடருக்குப் பேராசிரியரவர்கள் விளக்கம், செவிக்குத் தேனாய்த் தித்திக் கின்றது. இராமகாதை மங்களகரமாய் முடியக் காரணனாய் அமைந்தவன் என்பது எப்படி என்ற பேராசிரியரின் ஆய்வு, சிந்தைக்கும் தேனாய் இனிக்கின்றது.

விழையும் உருவினன் என்ற நான்காவது பகுதி, இதுவரை அதுமனைப்பற்றி யாரும் சிந்தித்திராத முயற்சி. எங்கெல்லாம் அநுமன் பேருருவம் எடுக்கிறான், அதன் நயம் என்ன என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளது அருங்கலைக்கோன் அவர் கட்கே உரித்தான அரிய ஆய்வு.

இப்படியெல்லாம் அதுமனை ஒவ்வொரு புதுக் கோணத்திலும், யாரும் கண்டு காட்டியிராத முயற்சியிலும் ஈடுபடுவதுதான் பேராசிரியர் ரெட்டியாரவர்கட்கே கைவந்த