பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 83

விழுங்கிவிட்ட ஒருத்தி என்று தெரிந்துகொண்டான், அநுமன்.

அவளது வாய் வழியாகச் சென்றாலன்றி ஆகாயத்தில் அநுமன் செல்ல வேறு வழி இல்லை. அவளது வாய் வழியாகப் புகுந்து, அவளது ஆழ்ந்த குகை போன்றுள்ள வயிற்றைப் பிளக்குமாறு கருதி, அவளை நெருங்கி, "நீ யார், இங்கு எதற்காக நிற்கின்றாய்? என்று வினவினான். அதற்கு அவள் "நீ என்னைப் பெண் என்று அவமதிக்க வேண்டா; என்னை எதிர்ப்பவர்கள் தேவர்களேயானாலும் இறந்தே விடுவர்; யமனாலும் என் கைப்பட்ட உயிரை விடுவிக்க இயலாது” என்று மறுமொழி கூற, அநுமன் அவள் திறந்த வாயினுட் புகுந்து, அவள் கதறும்படியாக ஒருநொடிப் பொழுதில் அவளது குடலைப் பிடுங்கிக்கொண்டு வெளியேறினான். தேவர்கள் மகிழ்ந்தனர்; அசுரர்கள் வருந்தினர்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளினாலும் அது மனது அஞ்சாநெஞ்சம் - வீர உணர்வு - தெளிவாகின்றது.

2. தூதனாய்ச் சென்றபோது : இலங்கையில் தூதனாய்ச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் இவனது வீரத்தைப் பிரகடனப்படுத்துகின்றன.

(1) இலங்காதேவி : காவல் மிகுந்த வாயில் வழியாகச் சென்றால் காலம் நீட்டிக்கும் என்று கருதி மதிலைக் கடந்து செல்லும்போது இலங்காதேவி" வழிமறிக்க இருவரிடையே யும் மோதல் நிகழ்கின்றது. இலங்கிணி எட்டுத்தோள்களும், நான்குமுகமும் கொண்டவள்; பிரகாசமுள்ள மேனியை யுடையவள்; சுழலும் கண்களையுடையவள். பகைத்து மோதி வந்தால் மூவுலகத்தையும் அடியோடு கட்டிவிடுபவள். யமனுடைய வலிமை இவளுக்கு உண்டு. நகரத்தை விழிப்புடன் பாதுகாத்து வருபவள். இவள் அதுமனை

14. இலங்காதேவி : இலங்கிணி என்ற பெயருடைய இவள் இலங்கையைப் பாதுகாத்து வரும் நகர தேவதை. நான்முகன் கட்டளைப்படி இந்நகரைக் காத்துவருபவள். இவள் வலி அழிந்தால் இந்நகரம் அழியும் என்பது நான்முகன் கட்டளை.