பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 அண்ணல் அநுமன்

அதட்டிப் பேச, மாருதி பணிவாய்ப் பேசுகின்றான். இவள் அநுமன்மீது சூலத்தை எறிய, அதை அவன் ஒடித்து எறிந்து விடுகிறான்; மற்ற ஆயுதங்களையும் அவ்வாறே செய்கின்றான். அவள் மாருதியை அடிக்க நெருங்க, அவன் அவளை அடித்து வீழ்த்த, அவள் எழுந்து சில சொல்லித் தன்னை இன்னாள் எனத் தெரிவித்து, "இந்நகர் விரைவில் அழியும்" என்று கூறி விடை பெற்று ஏகுகின்றாள்.

(2) அசோக வனத்தை அழித்துத் தனியாக நின்ற அநுமன், அருகிலிருந்த செய்குன்றத்தைப் பெயர்த்தெடுத்து இலங்கைமீது விட்டெறிந்து அழிக்கின்றான்.

“விட்டனன் இலங்கை தன்மேல்

விண்ணுற விரிந்த மாடம் பட்டன பொடிக ளான

பகுத்தன பாங்கு நின்ற சுட்டன பொறிகள் வீழத்

துளங்கினர் அரக்கர் தாமும் கெட்டனர் வீரர் அம்மா

பிழைப்பரோ கேடு சூழ்ந்தார். ' அநுமன் எறிந்த செய்குன்றினால் இலங்கையிலுள்ள மாட மாளிகைகள் தகர்ந்து பொடிகளாகின்றன. அப்போது தோன்றிய நெருப்புப்பொறிகளால் அண்மையிலுள்ள பொருள்கள் யாவும் சுடப்பெற்று ஒழிகின்றன; அரக்க வீரர்கள் அஞ்சி நடுங்கிக் கெட்டொழிகின்றனர். பருவத் தேவர்கள் இராவணனிடம் செய்தி அறிவிக்கின்றனர்.

(3) கிங்கரர் வதையின்போது : இராவணன் ஏவலால் கிங்கரர் வருகின்றனர். பல்வேறு ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் அதுமனை அவர்கள் எதிர்க்க, அவன் ஒரு மரத்தைக்கொண்டு அவர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் அவர்களையும் பலபடியாக அழித்தொழிக்கின்றான். இதனைப் பல பாடல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பாடல் :

"ஓடிக் கொன்றனன் சிலவரை,

உடல்உடல் தோறும்

15. சுத்தர. பொழிலிறுத்த - 54.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/85&oldid=1360795" இலிருந்து மீள்விக்கப்பட்டது