பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 அண்ணல் அநுமன்

இந்தப் போரில் அரக்கரது அம்பு முதலியவற்றால் அநுமனது புயங்களில் தோன்றிய புண்களைக் கணக்கிடுதல் அரிது. தனியனாய் நின்று கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலது படை என்ற பண்பை இவனிடம் காண்கின்றோம்.

"விழுப்புண் படாதநா

ளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் னாளை

எடுத்து" (776) என்ற வள்ளுவர் பெருமான் வாக்கின்படி அநுமன் பட்ட விழுப்புண்கள் அவனுக்குச் சிறப்பாக அமைகின்றன.

(4 சம்புமாலி வதை : இராவணன் கட்டளைப்படி அதுமனை உயிரோடு பிடித்துவரச் சம்புமாலி சதுரங்க சேனையுடன் புறப்பட்டு வருகின்றான். அந்த வனத்தின் வாயிலில்,

"இந்திர தனுவின் தோன்றும்

தோரணம் இவர்ந்து நின்றான்" அவன் நிற்கும் நிலையை,

சூழிரும் கதிர்கள் எல்லாம்

தோற்றிடச் சுடரும் சோதி ஆழியின் நடுவில் தோன்றும்

அருக்கனே அனையன் ஆனான்' (கதிர்கள் - கிரணங்கள், ஆழி - கடல்; சோதி - பேரொளி; அருக்கன் - சூரியன்)

இங்ங்ணம் அவன் வருகையைக் காண்கின்றோம். அவன் தோள் கொட்டி ஆர்த்தலை,

"கொல்லியல் அரக்கர் நெஞ்சில்

குடிபுக அச்சம் வீரன் வில்லென இடிக்க விண்ணோர் நடுக்குற வீரன் ஆர்த்தான்


18. சுந்தர. சம்புமாலி - 15. 19. சுந்தர. சம்புமாலி - 16 20. சுந்தர. சம்புமாலி - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/87&oldid=1360797" இலிருந்து மீள்விக்கப்பட்டது