பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன 89

பெருவீரனாய்த் தனிப்பட்டவனான அநுமன், மிகக் கொடியவராய் வெல்வதற்கு அரிய பஞ்ச சேனாபதிகளை வென்றதற்குத் தீய வழிகளில் செல்லும் தன்மையனவாய் அடக்கமுடியாத ஐம்புலன்களை எளிதில் வெல்லும் தத்துவ உணர்ச்சியை (அறிவை) உவமை கூறியது அற்புதம். சேனாபதிகள் அழிந்த செய்தி இராவணனை அடைகின்றது. (6) அக்ககுமாரன் * வதை : பஞ்ச சேனாபதிகள் பரலோகம் அடைந்த செய்தியைக் கேட்ட இராவணன் கொதித்தெழுகின்றான்; தானே நேரில் போருக்கெழுவதாகப் புறப்பட, அக்ககுமாரன் பணிந்து இரு பாதங்களிலும் விழுந்து தொழுது தன்னை அனுப்புமாறு வேண்டுகின்றான். இராவணனும் அதற்கு ஒருப்பட்டு அவனைச் செல்ல விடுக்கின்றான். சிவபெருமான், நரசிங்கம், ஆதிவராகம் ஆகிய இவர்களே குரங்கு வடிவமாக வந்திருந்த போதிலும் அதனை நின்னிடம் கொணர்ந்து நிற்க வைக்கின்றேன்" என்று தந்தையிடம் சூளுரைத்துச் செல்லுகின்றான், தனயன். அவனுக்குத் துணையாகப் பல அரக்க குமாரர்கள் ஏகுகின்றனர்.

"ஆறிரண்டு அடுத்த எண்ணின்

ஆயிரம் குமரர் ஆவி வேறிலாத் தோழர் வென்றி

அரக்கர்தம் வேந்தர் மைந்தர் ஏறிய தேரர் சூழ்ந்தார்

இறுதியில் யாவும் உண்பான் சீறிய காலத் தீயின்

செறிசுடர்ச் சிகைகள் அன்னார்' " (ஆறிரண்டு அடுத்த எண் ஆயிரம் = பன்னிராயிரம் காலத்தீ - யுகாந்த காலாக்கினி, சிகைகள் - சுவாலைகள்; அன்னார் - ஒத்தவர்கள்)

தம்பியின் உடலைப் பினங்களுக்கிடையே கண்ட இந்திர சித்தன் (பாசப்-20) சோகமும் கோபமும் கொள்ளுகின்றான்; "ஒப்படை கில்லாரெல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே, எப்படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்று விம்மலுறுகின்றான். (பாசப். 17) இராவணன் வருந்தியதாகப் பாடல் இல்லை. இராவன குடும்பத்தில் அட்சயகுமாரன் வாசகர்கட்கு ஒர் அநாதைபோல் தோற்றம் அளிக்கின்றான் !

30. சுந்தர. அக்க குமாரன் வதை - 9