பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சா நெஞ்சன் 91

குண்டலங்கள் முதலிய இரத்தினாபரணங்களில் பொருந்திய மணிகள் முதலியன சிந்திவிடவும், வயிற்றிலுள்ள குடல்கள் சரிந்துவிடவும், அவனுடைய பிடரியை வலிமை பொருந்திய ஒற்றைக் கையினால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையினால் பல குத்துக் குத்தி, அவன் உடலினின்று பக்கத்தில் ஒரு குதி குதித்தான்."

பின்னர், அவனை ஒழித்துக் கட்டியதைக் கம்பன்,

"நீத்துஆப் ஓடின உதிரப் பெருநதி

நீர்ஆ கச்சிலை பார்ஆகப் போய்த்தாழ் செறிதசை அரிசித் தினபடி

பொங்கப் பொரும்உயிர் போகாமுன் மீத்துஆம் நிமிர்சுடர் வயிரக் கைகொடு

பிடியா விண்ணொடு மண்காணத் தேய்த்தான் ஊழியின் உலகுஏழ் தேயினும்

ஒருதன் புகழ்இறை தேயாதான்."" (நீத்து - வெள்ளம் உதிரம் - இரத்தம்; பார் - பொருகளம்; சிலை - கல்(அம்மிக்கல்); அரிசி - ஊறலரிசி, பொரும்உயிர் - போர் செய்யும் அரக்கனது உயிர்; மீத்து ஆ - மேற்பக்கமாக, வயிரக் கை - உறுதியான கை விண் - மேல் உலகம் மண் - இவ்வுலகம், தேய்த்தான் - அரைத்தான்; இறை சிறிதளவு) என்ற பாடலால் அழகாகக் காட்டுவான். 'தேய்த்தான் - தேயாதான் என்ற முரண் தொடை, முத்தாய்ப்பு வைத்த மாதிரி நிகழ்ச்சிக்குப் பொலிவு ஊட்டுகின்றது. ஏழுலகங்கள் அழிகின்ற ஊழிக்காலத்திலும் அழியாத புகழுடைய அநுமன், பெருவெள்ளமாகப் பெருகி ஒடுகின்ற குருதியே நீராகவும் போர்க்களமே அம்மிக்கல்லாகவும், அக்ககுமாரனுடைய மாமிசம் முதலியவையே அரைக்க வேண்டிய அரிசியாகவும், அவனுடைய தசை நீக்கிய உடற்பகுதியே குழவிக்கல்லாகவும் கொண்டு விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் காணும்படி தனது கைகளினாலே தேய்த்து ஒழித்தான்.

35. சுந்தர. அக்க குமாரன் வதை - 34 - 37 36. சுந்தர. அக்க குமாரன் வதை - 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/92&oldid=1428687" இலிருந்து மீள்விக்கப்பட்டது